• ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அததி
• இலங்கை ஊடகவியலாளர்களின் தொழில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் பாதுகாப்பதற்குமான பிரகடனம் வெளியீடு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 25 வது வருடாந்த பொதுக் கூட்டம் 2022ஆம் ஆண்டு மார்ச் மாதம் 12ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பு – 10, ஸ்ரீ சங்கராஜா மாவத்தையிலுள்ள அல் - ஹிதாயா கல்லூரியின் பஹார்தீன் கேட்போர் கூடத்தில்நடைபெற்றது
முஸ்லிம் மீடியா போரத்தின்; தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் அல் ஹாஜ் என். எம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஊடகத்துறை அமைச்சர் டலஸ் அழகப்பெரும பிரதம அததியாகவும் ,இந்திய பாராளுமன்ற உறுப்பினரும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தமிழ் நாடு மாநில துணைத் தலைவருமான கே. நவாஸ்கனி கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டனர்.
சிரேஷ்ட ஊடகவியலாளரும் தொழில்சார் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் வருகைதரும் விரிவுரையாளருமான கலாநிதி எம். சீ ரம்ஸின் ஊடகமும் முஸ்லிம்களின் எதிர்காலமும் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
போரத்தினால் தொடர்ச்சியாக வெளியிடப்படும் மீடியா டிரெக்டரி மற்றும் இலங்கையில் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள், தொழில்சார் சலுகைகள், நலன்புரி நடவடிக்கைகள் தொடர்பில் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் மீடியா போரத்தினால் தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை மாநாட்டின் போது பிரகடனமாக வெளியிடப்பட்டது.
இரு அமர்வுகளாக நடைபெற்ற இம்மகாநாட்டின் இரண்டாவது அமர்வில் உத்தியோகஸ்தர் தெரிவு, யாப்புத் திருத்தம் என்பன இடம்பெற்றன புதிய தலைவியாக சிரேஷ்ட்ட ஒலிபரப்பாளர் புர்க்கான் பீ இப்திகார், பொதுச் செயலாளராக தேசிய விருது வென்ற ஊடகவியலாளர் பிஸ்ரின் முஹம்மத், பொருளாளராக ரொயிட்டர்ஸ் ஊடகவியலாளர் சிஹார் அனீஸூம் தெரிவு செய்யப்ட்டுள்ளனர்