ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2022-2023 ஆம் ஆண்டுக்கான புதிய செயற்குழுவின் முதல் கூட்டம் கொழும்பில் இன்று (20.03.2022) ஞாயிற்றுக்கிழமை காலை இடம் பெற்றது. இந்நிகழ்வு போரத்தின் தலைவி புர்கான் பீ இப்திகாரின் தலைமையில் இடம் பெற்றது. கடந்த 12 ஆம் திகதி கொழும்பில் இடம் பெற்ற ஸ்ரீPPலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பேராளர் மாநாட்டின் போது புதிய தலைவியாக சிரேஷ்ட ஒலிபரப்பாளர் புர்கான் பீ இப்திகார், பொதுச் செயலாளராக சர்வதேச விருது வென்ற ஊடகவியலாளர் எம்.ஜே. பிஸ்ரின் முஹம்மத், பொருளாளராக ரொயிட்டர்ஸ் செய்தியாளர் சிஹார் அனீஸ் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக சாதிக் ஷிஹான் ,ஜெம்சித் அசீஸ், எம்.ஏ.எம் நிலாம், கலைவாதி கலீல் , ஜாவித் முனவ்வர் எஸ்.எம்.எம். முஸ்தபா, நுஸ்கி முக்தார், எம்.எப். ரிபாஸ், ஷாமிலா செரீப், சமீஹா சபீர்;, எம்.எஸ்.எம் ஸாகிர், டீ.ஜீ.எம்.எஸ்.எம் ராபி, எம்.எம். ஜெஸ்மின், ஜே.எம். நாளிர், சீ.எம். சுபைர் ஆகியோர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டனர். இன்றைய தினம் (20.03.2022) இடம் பெற்ற முதல் செயற்குழு கூட்டத்தின் போது தலைவிக்கு உள்ள அதிகாரத்தில் தாஹா முஸம்மில், ஷம்ஸ் பாஹிம் ஆகியோரை செயற்குழுவி