மூத்த ஒலிபரப்பாளர் சனூஸ் முஹம்மத் பெரோஸ் அவர்களின் இழப்பு இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பிரிவின் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் பேருவளை சனூஸ் முஹம்மத் பெரோஸ் அவர்கள் நேற்று தனது 61 ஆவது வயதில் காலமானார். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். நீண்ட காலமாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவைப் பிரிவில் அறிவிப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் ஒலிபரப்பாளராகவும் பணி புரிந்த சகோதரர் சனூஸ் முஹம்மத் பெரோஸ் அவர்களது இழப்பு இத்துறையில் ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தெரிவித்துள்ளது. முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில் :- சிறந்த குரல் வளம் , தமிழ் மொழி உச்சரிப்பு , அவரது ஆற்றல் என்பவற்றின் காரணமாக ஒலிபரப்புத் துறையில் முன்னணி ஊடகவியலாளராகத் திகழ்ந்தார். ஊடகத் துறையில் விரிவுரைகள் , வகுப்புக்களையும் நடத்தி தனது அறிவையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். தமிழ் சேவையில் பகுதி நேர தொடர்பாளராக பணியாற்றியதோடு கட்டுப்பாட்டாளர் பதவியையும் வகித்தார். ச