Skip to main content

கிண்ணியாவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை கண்டனத்துக்குரியதாகும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்


கிண்ணியாவில் கடந்த 2021.11.23ஆம் திகதி இடம்பெற்ற படகு  விபத்து தொடர்பாக அறிக்கை இடுவதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறது.

எமது மீடியா போரத்தின் அங்கத்தவர்களான சக்தி நியூஸ் பெஸ்ட் பிராந்திய ஊடகவியலாளர் எச். எம். ஹலால்தீன், தினகரன் பிராந்திய ஊடகவியலாளர்களான ஏ. எல்.எம். ரபாய்தீன மற்றும்  அப்துல் சலாம் யாசீம் ஆகியோர் தம் கடமைகளை செய்து கொண்டிருக்கும்போது அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர்.

அத்துடன் ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீமின் கையடக்கத்தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில்  கிண்ணியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊடகவியலாளர்கள் தம் கடமையான படகு விபத்து மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களை அறிக்கை விடுவதற்கு முற்பட்டபோதே தாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற முறையற்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.

இதேவேளை, படகு விபத்துகுள்ளாகி பரிதாபகரமான முறையில்  உயிரிழந்த சிறார்கள் உட்பட ஏனையோருக்காக பிரார்த்திப்பதுடன்  உயிரிழந்தவர்களின்  குடும்பங்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அதன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிக்கின்றது.  இதுபோன்ற சம்பவங்களின் போது அவற்றை வெளிக்கொண்டு வருவதற்கு உட்படும் ஊடகவியலாளர்கள் தமது கடமைகளை எவ்வித  தடைகளுமின்றி செயற்பட ஒத்துழைப்பு வழங்குவது சமூகத்தின் கடமை என்றும் எமது மீடியா போரம் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு சில குண்டர்களின் இது  போன்ற செயற்பாட்டினால் முழு சமூகமும் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவது தவிர்க்க முடியாத என்பதையும் கவலையுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.                                                                                          

என். எம். அமீன்  - தலைவர்                             என். ஏ. எம். ஸாதிக் ஷிஹான் - பொதுச் செயலாளர்                                                                                                        

25.11.2021


 


Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது