ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம் கிண்ணியாவில் கடந்த 2021.11.23 ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்து தொடர்பாக அறிக்கை இடுவதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தை தெரிவிக்கிறது. எமது மீடியா போரத்தின் அங்கத்தவர்களான சக்தி நியூஸ் பெஸ்ட் பிராந்திய ஊடகவியலாளர் எச். எம். ஹலால்தீன் , தினகரன் பிராந்திய ஊடகவியலாளர்களான ஏ. எல்.எம். ரபாய்தீன மற்றும் அப்துல் சலாம் யாசீம் ஆகியோர் தம் கடமைகளை செய்து கொண்டிருக்கும்போது அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீமின் கையடக்கத்தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊடகவியலாளர்கள் தம் கடமையான படகு விபத்து மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களை அறிக்கை விடுவதற்கு முற்பட்டபோதே தாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற முறையற்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக விசாரித்து சம்பந