சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி. ஹுஸைன் பாரூக்கின் மறைவுக்கு - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம்
பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சித் துறைகளில் சுமார் ஐந்து தசாப்தங்களுக்கு மேலாகப் பணி புரிந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.பி. ஹுஸைன் பாரூக்கின் மறைவு குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவிப்பதாக அதன் தலைவர் என்.எம். அமீன் தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பில் அதன் தலைவர் என். எம். அமீன் வீடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: மர்ஹூம் ஹுஸைன் பாரூக் , கொழும்பு புதுக்கடையில் பிறந்தவர். தினபதி பத்திரிகையினூடாக ஊடகத் துறையில் பிரவேசித்த இவர் , 1956 ஆம் ஆண்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பாடல் ஒன்றைப் பாடியதையடுத்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் உள்வாங்கப்பட்டார். பின்னர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவையில் தயாரிப்பாளராகப் பதவி உயர்வு பெற்றார். பின்பு ஐரீஎன் , வர்ணம் தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கினார். வானொலியில் மிகப் பிரபலமான கலை நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி , நேயர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு முத்திர