Skip to main content

Posts

Showing posts from March, 2021

தமிழ் ஊடகத் துறைக்கு பேரிழப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம்

  மூத்த ஊடகவியலாளர் எஸ். சண்முகராஜாவின் மறைவு இலங்கை தமிழ் ஊடகத்   துறைக்கு பேரிழப்பாகும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவு குறித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும்   தெரிவிக்கப்பட்டுள்ளதாவது ,    சுமார்   5  தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் ஊடகப் பரப்பில் சுறுசுறுப்புடன் பணியாற்றிய சண்முகராஜா அவர்கள் ,  தனது   85  ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில் காலமான செய்தியை அறிந்து ஆழ்ந்த கவலையடைகிறோம். இலங்கையின் தமிழ் ஊடக ஜாம்பவான்களுடன் மிக நெருக்கமான உறவைப் பேணிய எல்லோராலும்   ‘ ஷண் அங்கிள் ‘  என அன்பாக அழைக்கப்படும் சண்முகராஜா அவர்கள் ,  தமிழ் ஊடகத்துறையின் முன்னோடியாகக் கருதப்படும் எஸ்.டி.   சிவநாயகம் ஐயாவின் கீழ் பல பத்திரிகைகளின் ஆசிரிய பீடத்தில் பணியாற்றிய அனுபவமிக்கவராவார். இலங்கை விவகாரங்களுடன் மாத்திரமன்றி இந்தியாவின் தமிழ் நாட்டு அரசியல் மற்றும் இலக்கிய விவகாரங்கள் குறித்தும் அவர் ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார். அரசியல்வாதிகளுடனும் ஊடகவியலாளர்களுடனும் நட்புடன் ப