பிரபல மூத்த ஒலி, ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீல் அவர்களின் மறைவு ஊடகத் துறைக்கு பெரும் இழப்பு -ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் -
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபக அங்கத்தவரும் அதன் நீண்ட கால உப தலைவர்களுள் ஒருவருமான பிரபல மூத்த ஒலி , ஒளிபரப்பாளர் ரஷீத் எம். ஹபீல் அவர்கள் இன்று அதிகாலை தனது 75 ஆவது வயதில் காலமானார் . இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். ஊடகத் துறையில் பழுத்த அனுபவம் மிக்க ரஷீத் எம். ஹபீல் ரூபவாஹினி முஸ்லிம் பிரிவின் முன்னாள் தலைவராக கடமையாற்றி இலங்கை முஸ்லிம் ஊடகவியல் பரப்பில் முன்னோடிகளுள் ஒருவராகவும் திகழ்ந்தார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என் எம் அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடுகையில் :- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஸ்தாபிக்கப்பட்டது முதல் பல்வேறு பொறுப்புக்களை வகித்து மர்ஹ _ ம் ரஷீத் எம் ஹபீல் போரத்தின் உதவிப் பொருளாளர் , பயிற்சிக் குழு பொறுப்பாளர் , உப தலைவர் முதலான பொறுப்புக்களை வகித்து வந்ததுடன் அந்திம காலத்தில் போரத்தின் ஆலோசகராகவும் செயலாற்றி வந்தார். பலர் ஊடகத் துறையில் கால் பதிப்பதற்கும் மற்றும் பல ஊ