Skip to main content

Posts

Showing posts from November, 2020

கலைமகள் ஹிதாயா ரிஸ்வியின் தீடீர் மறைவு அதிர்ச்சியளிக்கிறது - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆழ்ந்த அனுதாபம்

  பிரபல கவிஞரும் எழுத்தாளருமான சாய்ந்தமருதைச் சேர்ந்த கலைமகள் ஹிதாயா ரிஸ்வி அவர்களின் திடீர் மரணம் இலக்கியவாதிகளுக்கும் ஊடகத்துறையினருக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் . எம் . அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார் . அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது , கலைமகள் ஹிதாயா ரிஸ்வி கவிஞராக , எழுத்தாளராக , சமூகப் பணியாளராக பல்வேறு தளங்களில் பணியாற்றிய ஒருவராவார் . இலக்கியத்தின் மீது அதிக ஈடுபாடு கொண்டிருந்த அவர் பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளதுடன் பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் ஏராளமாக ஆக்கங்களை எழுதி வெளியிட்டுள்ளார் . கடந்த சில வருடங்களாக அவர் முகநூல் மூலமாக இலக்கிய ப் பணிகளை முன்னெடுத்து வந்ததுடன் கடல் கடந்து வாழும் இலக்கியவாதிகளுடனும் சிறந்ததொரு உறவைப்   பேணி வந்தார் . தடாகம் கலை இலக்கிய வட்டம் எனும் அமைப்பை நிறுவி அதன் ஊடாக ஏராளமான கலை இலக்கிய நிகழ்வுகளை நடாத்தியுள்ளதுடன் தடாகம் எனும் இலக்கிய சஞ்சிகையையும் வெளியிட்டுள்ளார் . உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நடைபெற்ற பல இலக்கிய மாநாடுகளில் இவர் பங்கேற்றுள்ளதுடன் ,