Skip to main content

பெரும் புத்திஜீவியை நாடு இழந்திருக்கிறது: கலாநிதி சுக்ரியின் மறைவுக்கு அனுதாபம்

ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும் புத்திஜீவியுமான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இன்று தனது 79ஆவது வயதில் மறைந்தார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாரிய இழப்பாகும்.

கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த பன்முக ஆளுமை கொண்ட ஒரு பெரும் புத்திஜீவியை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்திருக்கிறது.

இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுப்பதற்கு தலைமை தாங்கி இவர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக “Muslims of Sri Lanka- Avenues to Antiquity” எனும் நூல் வரலாற்று நூல் இலங்கை முஸ்லிம்களால் நன்றியோடு நினைவுகூரத்தக்க மாபெரும் சாதனையாகும்.

இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியாருடன் இணைந்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கலாநிதி சுக்ரி இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, சமூகப் பண்பாட்டு பெறுமானங்கள் பற்றி ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், ஏ.எம்.ஏ. அஸீஸ், எம்.எம்.எம். மஹ்றூப் வரிசையில் பெரிய பங்கினைச் செலுத்திய அறிஞராகவும் விளங்குகிறார்.

ஜாமிஆவின் வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்படும் காலாண்டு இஸ்லாமிய சஞ்சிகையான ‘இஸ்லாமிய சிந்தனை’யின் ஆலோசராகவும் அதன் பிரதம ஆசிரியராகவும் இருந்து கடைசி வரை பங்களிப்புச் செய்து வந்த கலாநதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்களை சாதனைகளைப் பாராட்டும் வகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அவருக்கு வாழ்நாள் சாதனைளாயளர் விருது வழங்கி கௌரவித்தது. மீடியா போரம் அதனது வருடாந்த மாநாட்டில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்க தீர்மானித்ததையடுத்து முதன் முதலில் அவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி வைத்ததை இந்த சந்தர்ப்பத்தில் நினைவுகூருகின்றோம்.

வல்ல இறைவன் அவரது பாவங்களை மன்னித்து அவரது அத்தனை நற்கருமங்களை ஏற்று அங்கீகரித்து உயர்ந்த சுவனபதியை வழங்குமாறு இந்த ரழமானின் கடைசிப் பகுதியில் பிரார்த்திப்போமாக!

என்.எம். அமீன்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
19.05.2020

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது