Skip to main content

Posts

Showing posts from May, 2020

பெரும் புத்திஜீவியை நாடு இழந்திருக்கிறது: கலாநிதி சுக்ரியின் மறைவுக்கு அனுதாபம்

ஜாமிஆ நளீமிய்யாவின் பணிப்பாளரும் புத்திஜீவியுமான கலாநிதி எம்.ஏ.எம். சுக்ரி அவர்கள் இன்று தனது 79ஆவது வயதில் மறைந்தார், இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன். அவரது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் நாட்டுக்கும் பாரிய இழப்பாகும். கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை முஸ்லிம் சமூகத்தின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சிக்காகவும் மார்க்கப் பணிக்காகவும் தன்னை அர்ப்பணித்த பன்முக ஆளுமை கொண்ட ஒரு பெரும் புத்திஜீவியை முஸ்லிம் சமூகமும் நாடும் இழந்திருக்கிறது. இலங்கை முஸ்லிம்களின் வரலாற்றைத் தொகுப்பதற்கு தலைமை தாங்கி இவர் மேற்கொண்ட முயற்சியின் விளைவாக “Muslims of Sri Lanka- Avenues to Antiquity” எனும் நூல் வரலாற்று நூல் இலங்கை முஸ்லிம்களால் நன்றியோடு நினைவுகூரத்தக்க மாபெரும் சாதனையாகும். இலங்கை முஸ்லிம்களின் கல்வி மேம்பாட்டிற்காக நளீம் ஹாஜியாருடன் இணைந்து இஸ்லாமிய மறுமலர்ச்சி இயக்கத்தை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய கலாநிதி சுக்ரி இலங்கை முஸ்லிம்களின் வரலாறு, சமூகப் பண்பாட்டு பெறுமானங்கள் பற்றி ஐ.எல்.எம். அப்துல் அஸீஸ், ஏ.எம்.ஏ. அஸீஸ், எம்.எம்.எம். மஹ்றூப் வரிசையில் பெரிய பங்கினைச் செ

ஊடக அறிக்கை: சர்வதேச ஊடக சுதந்திர தினம் - 03 மே 2020

சர்வதேச ஊடக சுதந்திர தினம் வருடாந்தம் மே 3 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. இவ்வருட ஊடக சுதந்திர தினத்தின் கருப்பொருள் “அச்சம் அல்லது பக்கச்சார்பு அற்ற ஊடகவியல்” என்பதாகும். இம் முறை இத் தினமானது உலகளாவிய கொவிட் 19 நெருக்கடி காலத்தில் அனுஷ்டிக்கப்படுவதானது, ஊடக சுதந்திரத்தை உலகம் பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் என்பதை மீள வலியுறுத்துவதாக அமைந்துள்ள அதே நேரம், போலிச் செய்திகளை முறியடிப்பதற்கான ஊடகங்களின் வகிபங்கை மேலும் ஊக்கப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. ஒருபுறம் ஊடக சுதந்திரம் பொறுப்பற்ற வகையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்ற அதேவேளை, மறுபுறும் ஊடக சுதந்;திரத்தை மறுக்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றமை கவலைக்குரியதாகும். குறிப்பாக கொவிட் 19 வைரஸ் பரவலை அடிப்படையாகக் கொண்டு ஏராளமான போலிச் செய்திகள் பரப்பப்படுவதானது குறித்த வைரஸை முறியடிப்பதற்கான போராட்டத்தை மேலும் கடினமாக்கியுள்ளதாக அண்மையில் உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரொஸ் அடானம் சுட்டிக்காட்டியிருந்ததையும் இந்த இடத்தில் நினைவூட்ட விரும்புகிறோம். அந்தவகையில் இலங்கையில் உள்ள பிரதான ஊடகங்கள், போலிச் செய்

கொவிட் -19 நெருக்கடி காலத்தில் சமூகப் பொறுப்புடன் ஊடக சுதந்திரத்தினை பேணுவோம் (தமிழ், සිංහල, English)