Skip to main content

Posts

Showing posts from January, 2020

முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பைரூஸ், ஜிப்ரி பற்றிய நினைவுச் சொற்பொழிவு

சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான மர் { ஹம் எப்.எம். பைறூஸ் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளருமான மர் { ஹம் ஏ.ஆர்.எம். ஜிப்ரி ஆகியோரின் நினைவுச் சொற்பொழிவு நாளை வெள்ளிக்கிழமை ( 31) மாலை 4 மணிக்கு > கொழும்பு 10> தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் சர்வதேச அறிப்பாளர் பி.எச். அப்துல் ஹமீத் மற்றும் டெய்லிமிரர் பத்திரிகையின் ஆலோசக ஆசிரியர் எம்.எஸ்.எம். ஐயூப் ஆகியோர் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளனர். இந்நிகழ்வில் இரு சிரேஷ்ட ஊடகவியலாளர்களதும் குடும்பத்தினர் மற்றும் அமைப்பின் அங்கத்தவர்கள் > கல்விமான்கள் > புத்திஜீவிகள் > ஊடகவியலாளர்கள் > எனப் பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். இவர்கள் நினைவாக புலமைப்பரிசில்களும் > வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்களும் வழங்கப்படவுள்ளன. மர் { ஹம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி கடந்த   ( 19.01.20

சிரேஷ்ட அறிவிப்பாளரும் ஏ. ஆர். எம். ஜிப்ரியின் மறைவு சமூகத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என் எம் அமீ ன் இளம் ஊடகவியலாளர்கள் பலரை உருவாக்கிய சிரேஷ்ட அறிவிப்பாளரும் >  ஊடகவியலாளருமான ஏ. ஆர். எம். ஜிப்ரியின் மறைவு சமூகத்திற்கும் ஊடகத்துறைக்கும் பேரிழப்பாகும் என குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவையிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அன்னாரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்  அன்னார் தனது மறுமை வாழ்வில் ஈடேற்றம் பெற்று உயர்ந்த சுவனத்தை அடைய பிரார்த்திப்பதாகவும் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது :- மர்ஹ _ ம் ஏ ஆர் எம் ஜிப்ரி அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று >  குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா கற்கை நெறியினை பூர்த்தி செய்த புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியராவார். களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரி >  தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராக கல்வி பணியாற்றிய மர்ஹ _ ம் ஜிப்ரி அவர்கள் நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்து அதிபர்களில் ஒருவராக தேர்ந்

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஏ. ஆர். எம். ஜிப்ரி காலமானார். - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முன்னாள் பொருளாளரும் சிரேஷ்ட அறிவிப்பாளரும்,   ஊடகவியலாளருமான அல்ஹாஜ் ஏ. ஆர். எம். ஜிப்ரி ( 20.01.2020) காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் சிறிது காலம் நோய்வாய்பட்டிருந்த இவர் அண்மையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்துள்ளார். அன்னாரின் ஜனாஸா இன்று ( 21.01.2020) காலை 8.00 மணி வரை பாணந்துறை,   சரீகமுல்லை யிலுள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கத்திற்காக அங்கிருந்து   அவரது சொந்த ஊரான கல்முனைக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது.  இஷாத் தொழுகையின் பின்னர் அக்பர் பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  மர்ஹ _ ம் ஏ ஆர் எம் ஜிப்ரி அவர்கள் கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயின்று , குண்டசாலை விவசாயக் கல்லூரியில் டிப்ளோமா பெற்ற புகழ்பெற்ற விஞ்ஞானப் பாட ஆசிரியராவார். களுத்துறை ஜீலான் மத்திய கல்லூரி,   தொடவத்தை அல் பஹ்ரியா பாடசாலை ஆகியவற்றின் முன்னாள் அதிபராவார். நாடுதழுவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பத்த