A+ A-

புதிதாக நியமிக்கப்பட்ட ஊடக அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், மேற்படி அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.



ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் எம் அமீனின் கையொப்பமுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து மடல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.