இலங்கையில் தனது
பதவிக்காலத்தை நிறைவு செய்து இம்மாத இறுதியில் நாடுதிரும்பவுள்ள
இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை
நிகழ்வு 2019.12.06ஆம் திகதி
(வெள்ளிக்கிழமை) இரவு கொழும்பு – 03 வாலுகாராம வீதி இலக்கம் 38ல் உள்ள ஈஸ்டர்ன் வொக் ரெஸ்டுரன்டில் நடைபெற்றது.

இலங்கையின்
முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் முஸ்லிம் ஊடகவியலலாளர்களின் துறைசார் முன்னேற்ற
நடவடிக்கைகளுக்கு துருக்கி தூதுவர் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டும் வகையில்
ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது துருக்கி தூதுவரை போரத்தின் தலைவர்
பொன்னாடை போரத்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினார்.