Skip to main content

Posts

Showing posts from December, 2019

துருக்கி தூதுவருக்கு முஸ்லிம் மீடியா போரம் வழங்கிய பிரியாவிடை

இலங்கையில் தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து  இம்மாத  இறுதியில் நாடுதிரும்பவுள்ள இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் அவர்களை கௌரவிக்கும் பொருட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த கௌரவிப்பு மற்றும் பிரியாவிடை நிகழ்வு 2019.12.06 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) இரவு கொழும்பு – 03 வாலுகாராம வீதி இலக்கம் 38 ல் உள்ள ஈஸ்டர்ன் வொக் ரெஸ்டுரன்டில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான பங்களதேஷ் உயர் ஸ்தானிகர் ரியாஸ் ஹமீதுல்லாஹ் துருக்கி தூதரக அதிகாரிகள் மற்றும் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் ; இந்த இரவு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர். இலங்கையின் முன்னேற்ற செயற்பாடுகள் மற்றும் முஸ்லிம் ஊடகவியலலாளர்களின் துறைசார் முன்னேற்ற நடவடிக்கைகளுக்கு துருக்கி தூதுவர் வழங்கிய ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வின் போது துருக்கி தூதுவரை போரத்தின் தலைவர் பொன்னாடை போரத்தி கௌரவித்ததுடன் நினைவுச் சின்னமொன்றையும

புதிதாக நியமிக்கப்பட்ட ஊடக அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்து

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அண்மையில் புதிதாக நியமிக்கப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப, உயர் கல்வி, தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும், மேற்படி அமைச்சின் இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன அவர்களுக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என் எம் அமீனின் கையொப்பமுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ள வாழ்த்து மடல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.