இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர்
கே.எம். காதர் மொஹிதீனின் மனைவியான ஜி. லத்தீபா பேகத்தின் மறைவிற்கு ஸ்ரீலங்கா
முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம் வெளியீட்டுள்ளது.
மர்ஹ_மா லத்தீபா பேகம் அவர்கள்
தனது கணவரின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாது, பொது வாழ்விலும், அரசியல்
வாழ்விலும் இணை பிரியாது அரும்பணியாற்றியதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர்
என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அனுதாபச் செய்தியில்
மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- "பேராசிரியர் காதர் மொகிதீனின்
மனையாள் லத்தீபா பேகம் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (30) புதன்கிழமை
திருச்சியில் காலமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன்.
விஷேடமாக இந்திய இலங்கை
முஸ்லிம்களினதும் ஏனைய சமூகத்தினதும் நலனுக்காக
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஊடக அதன் தேசியத் தலைவரான
பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் ஆற்றிவரும் அனைத்து அரசியல், சமூக நல
செயற்பாடுகளுக்கு இறுதி வரை பக்கபலமாக இருந்து வந்த மர்ஹ_மா லத்தீபா பேகம் அவர்கள்
தனது அன்புக் கணவரைப் போலவே எளிமையான வாழ்க்கையை கடைப்பிடித்து இறைவிசுவாசத்துடன் இஸ்லாமிய
சன்மார்க்க கடமைகளிலும் தவறாது ஈடுபட்டுவந்தார். இதன் காரணமாக பாமர மக்கள்
தொடக்கம் அரசியல் தலைவர்கள் வரை நன்கு மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.
மறைந்த கலைஞர் மு. கருணாநிதி
மற்றும் தி.மு.க என்று அழைக்கப்படும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தற்போதைய தலைவர்
ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினர்> அரசியல்வாதிகள்> அறிஞர்கள் மற்றும் அவருடன்
மனம்விட்டு பழகிய அனைவரையும் விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அவரது நினைவுகள் எல்லோரின்
மனங்களிலும் நிலைத்திருக்கும்.
தனிப்பட்ட முறையிலும் எனது குடும்பம் மற்றும்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சார்பிலும் அவரது மறைவினால்
துயருற்றிருக்கும் பேராசிரியருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த
அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல இறைவன் அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமைநாளில் நிலையான
ஜன்னத்துல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்குவதற்கு பிரார்த்திக்கிறோம்".
என். எம். அமீன்
தலைவர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்
30.10.2019