Skip to main content

ஜனாதிபதி தேர்தலை முஸ்லிம் சமூகம் நிதானமாக எதிர்கொள்ள வேண்டும் முஸ்லிம் மீடியா போரம் அறிக்கை

இலங்கைத் தேசம் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றை எதிர்நோக்கியுள்ள நிலையில்முஸ்லிம் சமூகம் மிகவும் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும் எனவும் வாக்களிப்பின் ஊடாக உரிமைகளை வென்றெடுக்கும் வகையில் சிந்தித்து செயலாற்ற வேண்டும் எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு வழிகாட்டல்களை வழங்கும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதி  ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அது தொடர்பான பிரசாரப் பணிகள் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குகளை மையப்படுத்தி பல்வேறு கட்சிகளும் தமது பிரசாரங்களை முன்னெடுத்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளும் தேசிய கட்சிகளில் அங்கம் வகிப்போரும் சுயேட்சையாக களமிறங்கியுள்ளோரும் தத்தமது தரப்புகளை நியாயப்படுத்தும் வகையிலான பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது அவர்களது ஜனநாயக உரிமை என்றபோதிலும்,   தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்போரும் அவர்களது ஆதரவாளர்களும் நாட்டின் சட்டத்தை மதித்தும் இஸ்லாமிய வரையறைகளை மீறாத வகையிலும் தமது தேர்தல் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம்.

அத்துடன் அரசியல்வாதிகளும் அவர்களது ஆதரவாளர்களும் சமூக வலைத்தளங்கள் ஊடாக முரண்பாடுகளைத் தூண்டும் வகையிலான கருத்துக்களை முன்வைப்பதை அவதானிக்க முடிகிறது. இவை சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளமை கவலைக்குரியதாகும். அந்த வகையில் சமூகத்தைப் பிளவுபடுத்தும் வகையிலான கருத்தாடல்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் சகலரையும் வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.

ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற குண்டுத் தாக்குதலின் பின்னர் நடைபெறும் தேசிய மட்ட தேர்தல் என்ற வகையில்இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத கருத்துக்களும் பிரசாரங்களும் மேலோங்கியிருப்பதை அவதானிக்க முடிகிறது. இனவாத சக்திகள் முஸ்லிம்களின் உணர்வுகளை தூண்டும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டாலும் உணர்ச்சிவசப்படாது அவற்றை எதிர்கொள்வதில் முஸ்லிம் சமூகம் நிதானமாகவும் புத்திசாதுரியமாகவும் நடந்து கொள்ள வேண்டும். 

வாக்களிப்பது நமது ஜனநாயக உரிமை மட்டுமன்றிஇஸ்லாமிய நோக்கில் அது ஒரு அமானிதமும் கடமையும் சாட்சியமளித்தலுமாகும். அந்த வகையில் வாக்குரிமையை துஷ்பிரயோகம் செய்யாதுசமூக நலனை மையப்படுத்தி தமது வாக்குகளை அளிக்க ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

அந்தவகையில்  நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கவுள்ள இத் தேர்தலில் எமது வாக்குகளை முறையாக பயன்படுத்த முன்வருவதுடன் தேர்தல் முடிவுகள் நாட்டிற்கும் சமூகத்திற்கும் நன்மைபயக்கும் வகையில் அமைய வேண்டும் என  பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் வேண்டுகோள்விடுக்கிறோம்.





Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது