முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் தலைவராக தற்போதைய உப தலைவர்களில் ஒருவரான திருமதி புர்கான் பீ இப்திகார் நியமிக்கப்பட்டுள்ளார்.
போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என். எம். அமீன் தனிப்பட்ட விஜயமாக இரண்டு வார காலம் லண்டன் பயணமானதை அடுத்து இன்று 2019.10.07ஆம் திகதி முதல் 22ஆம் திகதி நாடு திரும்பும் வரையான காலப்பகுதிக்கே இவர் போரத்தின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22 வருடக கால வரலாற்றில் பெண் ஊடகவியலாளர் ஒருவர் பதில் தலைவராக நியமிக்கப்பட்டமை இதுவே முதற் தடவையாகும். திருமதி புர்கான் பீ இப்திகார் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மூத்த ஒலிபரப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.