இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவரும் பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீனின் மனைவியான ஜி. லத்தீபா பேகத்தின் மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் அனுதாபம் வெளியீட்டுள்ளது. மர்ஹ _ மா லத்தீபா பேகம் அவர்கள் தனது கணவரின் தனிப்பட்ட வாழ்வில் மட்டுமல்லாது , பொது வாழ்விலும் , அரசியல் வாழ்விலும் இணை பிரியாது அரும்பணியாற்றியதாக முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அனுதாபச் செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :- " பேராசிரியர் காதர் மொகிதீனின் மனையாள் லத்தீபா பேகம் நீண்ட காலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று ( 30) புதன்கிழமை திருச்சியில் காலமான செய்தியைக் கேட்டு ஆழ்ந்த கவலையடைந்தேன். விஷேடமாக இந்திய இலங்கை முஸ்லிம்களினதும் ஏனைய சமூகத்தினதும் நலனுக்காக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஊடக அதன் தேசியத் தலைவரான பேராசிரியர் கே.எம். காதர் மொஹிதீன் ஆற்றிவரும் அனைத்து அரசியல் , சமூக நல செயற்பாடுகளுக்கு இறுதி வரை பக்கபலமாக இருந்து வந்த ம