ஸ்ரீலங்கா
முஸ்லிம் மீடியா போரத்தின் மகளிர் பிரிவு அண்மையில் கொழும்பில் அங்குரார்ப்பணம்
செய்து வைக்கப்பட்டது.
முஸ்லிம்
மீடியா போரத்தின் உப தலைவியும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான திருமதி புர்கான் பி
இப்திகார் தலைமையில் நடைபெற்ற இந்நகிழ்வில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியன்
யூனியன் முஸ்லிம் லீக்கின் முக்கிய உறுப்பினரும், தமிழ் நாடு வக்பு வாரியத்தின் உறுப்பினருமான திருமதி பாத்திமா முஸப்பர் பிரதம
அதிதியாக கலந்து கொண்டு உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
கொழும்பு 10
மருதானையில் அமைந்துள்ள எல் எம்தியாஸ் நிறுவனத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில்
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் அல்ஹாஜ் என். எம். அமீன் எல்
எம்தியாஸ் நிறுவனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ஏ. எல்.. எம். உவைஸ் ஹாஜி, ஜனாப் எம் முஸப்பர் போரத்தின் செயலாளர்
ஸாதிக் ஷிஹான் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் எம். எஸ். எம். ஸாஹிர்
மற்றும் சிரேஷ்ட பெண் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

போரத்தின்
நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிக்கும் பெண் உறுப்பினர்களான திருமதி புர்கான் பீ
இப்திகார். சாமிலா ஷரீப், ஸமீஹா ஷபீர்
ஆகியோரின் அயராத முயற்சியின் பலனாக முஸ்லிம் மீடியா போரத்தின் மகளின் பிரிவு
அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
போரத்தின்
நிறைவேற்றுக் குழு உறுப்பினரும் இதழாசியருமான திருமதி சாமிலா ஷரீப் இந்த நிகழ்வை
தொகுத்து வழங்கினார்.