A+ A-

இந்திய பாராளுமன்ற உறுப்பினர் கவிஞர் மு. க. கனிமொழிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் இடையிலான விஷேட சந்திப்பு

இலங்கைக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்ட திராவிட முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்றக் குழுவின் துணைத் தலைவரும் தமிழக முன்னாள் முதல்வர் காலஞ்சென்ற கலைஞர் கருணாநிதியின் புதல்வியும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான கவிஞர் மு. க. கனிமொழிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்திற்கும் இடையிலான விஷேட சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றது.

போரத்தின் தலைவரும் நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான கலாஷணம் என். எம். அமீன் தலைமையில் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்ற இந்த சந்திப்பில் போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் பொருளாளர் ஜெம்ஸித் அஸீஸ், உப தலைவர்களான திருமதி புர்கான் பீ இப்திகார், எஸ். ஏ. அஸ்கர் கான் தேசிய அமைப்பாளர் எம். ரிபாஸ் உப செயலாளர் மௌலவி முஸ்தபா உப பொருளாளர் ஜாவிட் முனவ்வர் உட்பட போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள்  பாராளுமன்ற முன்னாள் உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீனின் பங்குபற்றுதலுடன் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது இலங்கை இந்திய ஊடகவியலாளர்களுக்கிடையிலான உறவை ஏற்படுத்தவும் பயிற்சி வாய்ப்புக்களை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கோரிக்கை விடுத்தது.
போரத்தின் கோரிக்கை தொடர்பில் இந்திய ஊடகவியலாளர்களுடன் கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கௌரவ கனிமொழி உறுதியளித்தார்.

இந்த சந்திப்பின் இறுதியில் போரத்தின் சார்பில் உப தலைவியான திருமதி புர்கான் பி இப்திகார் கனிமொழிக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் போரத்தின் தலைவர் நினைவுச் சின்னமொன்றையும் வழங்கினார்.