A+ A-

மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இலங்கை இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் கருத்தாடலும் நிகழ்வு


“இலங்கை இந்திய உறவுகளுக்கிடையிலான சினேகபூர்வ சந்திப்பும் கருத்தாடலும்” என்ற தலைப்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த நிகழ்வு 2019.09.13ஆம் திகதி வெள்ளிக் கிழமை மாலை கொழும்பு ரமடா ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் சுகாதார போஷாக்கு, சுதேச மருத்துவ அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன, தேசிய ஒருமைப்பாடு,அரச கரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சர் மனோ கனேசன் ஆகியோர் பிரதம அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.இந்த நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பேராசிரியர் காதர் மொஹிதீன் தலைமையில் இந்திய பாராளுமன்ற உறுப்பினர்களான ஈ. ரி பஷீர் (பொன்னாணி), மு. நவாஸ்கனி (இராமநாதபுரம்), கேரள மாநில முன்னாள் அமைச்சர் அப்துல் மஜீத் எம். எல். ஏ, தமிழக சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. எம். முஹம்மது அபூபக்கர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கின் முக்கியஸ்தர் திருமதி பாத்திமா முஸப்பர், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உதவி பொதுச் செயலாளர் கவிஞர் ஆளுர் ஷா நவாஸ், தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஸவாஹிருல்லாஹ், எழுத்தாளர் காயல் மஹ்பூப், ஊடகவியலாளர் திருச்சி எம். கே. சாகுல் ஹமீட், தொழிலதிபர் சதக் அப்துல் காதர் உட்பட இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Add caption

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிப் பொதுச் செயலாளர் மௌலவி எம். எஸ். ஏம். தாஸிமின் கிராஅத்துடன் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீன் வரவேற்பு மற்றும் தலைமை உரை நிகழ்த்தினார் அதன் இந்திய பிரமுகர்களின் உரைகள் இடம்பெற்றன. அதனைத் தொடர்ந்து இந்திய எழுத்தாளர் காயல் மஹ்பூபினால் எழுதப்பட்ட தமிழ்மொழி வளர்ச்சியில் முஸ்லிம் இதழ்களின் பங்களிப்பு என்ற நூல் வெளியிடபட்டதுடன் எமது போரத்தின் இணைய ஆசிரியர் ரிப்தி அலியினால் தனது பாலஸ்தீன் பயண அனுபவத்தை வைத்து எழுதப்பட்டு வெளியிடப்பட்ட களவாடப்பட்ட பூமியின் கதை என்ற நூலும் கையளிக்கப்பட்டது. 

இந்த நிகழ்வின் போது இலங்கை இந்திய உறவினை மேலும் பலப்படுத்தும் வகையில் இலங்கை வருகை தந்த இந்திய பிரதிநிதிகள் மீடியா போரத்தினால் ஞாபகச் சின்னங்கள் வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன், இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிம், பிரதியமைச்சர்களான எம். எஸ். எஸ். அமீர் அலி, அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர்களான எச். எம். எம். ஹரீஸ், முஜீபுர் ரஹ்மான், ஏ. எல். நஸீர், கொழும்பு பிரதி மேயர் எம். ரி. எம். இக்பால், ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் பணிப்பாளர் கலாநிதி எம். ஏ. எம். சுக்ரி நிகழ்விற்கு இணை அனுசரனை வழங்கிய தொழிலதிபர்களான முஸ்லிம் ஸலாஹ_த்தீன், குதுப்புதீன் ராஜா, அஷ்ரப் அஸீஸ் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி பாராட்டினார்.

முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் நன்றியுரை நிகழ்த்தியதுடன் கேரளாவிலிருந்து வருகை தந்த சங்கைக்குறிய சாதிக் அலி தங்கள் விஷேட துஆ பிரார்த்தனை வழங்கினார்.