ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் vikalpa.org ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு (2019.09.29) ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு கிரீன் கார்டன் ஹோட்டல் மண்டபத்தில் இடம்பெற்றது. "சமூக ஊடகங்களும் - ஒழுக்க நெறியும்" எனும் தொனிப்பொருளில் இந்த செய்லமர்வு இடம்பெற்றது. விகல்ப இணையத்தளத்தின் பிரதம ஆசிரியர் சம்பத் சமரக்கோன், ட்ரான்ஸ்பேரன்சி இன்ரநெசனல் நிறுவனத்தின் தகவல் தொழில்நூட்ப முகாமையாளர் ஹரித்த தஹாநாயக்க ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு சமூக ஊடங்ககளை சிறந்த முறையில் பொறுப்புடன் எவ்வாறு கையாள்வது என்பது பற்றியும் அதன் நன்மை, தீமைகள் ஆகிய விடயங்களை எடுத்துரைத்தனர். இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான் மற்றும் விகல்ப இணையத்தளத்தின் இணை ஆசிரியர் இஷாரா தனசேகர ஆகியோர் இந்நெறியை நெறிப்படுத்தினர். இந்த ஒரு நாள் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அச்சு, இலத்திரனியல், இணைய ஊடகவியலாளர் பலர் கலந்துகொண்டிருந்தமை கு