A+ A-

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூலோபாய திட்டமிடல் பயிற்சி பட்டறை



ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான மூலோபாய திட்டமிடல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறை கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (03 & 04.08.2019) கொழும்பில்  இடம்பெற்றது.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் மீடியா போரத்தின் சகல செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்தல், உறுப்பினர்களுக்கான செயற்பாடுகளை அதிகரித்தல் மற்றும் நலன்புரி திட்டங்களை வகுத்தல், ஊடக மற்றும் சமூக சிவில் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுதல் போன்ற முக்கிய விடயங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.


மேற்படி மூலோபாய திட்டமிடல் பயிற்சி பட்டறையின் வளவாளர்களாக IREX நிறுவனத்தின் பிரதிப் பொறுப்பாளர் எம். சீ. ரஸ்மின், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் IMS எனும் சர்வதேச ஊடக ஒத்துழைப்பு நிறுவனத்தின் ஆலோசகரருமான கலாநிதி ரங்க கலன்ஸூரிய, சமூக ஊடக செயற்பாட்டாளர் நாலக்க குணவர்தன,  மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் மற்றும் மீடியா போரத்தின் உபதலைவர் அஸ்கர் காண் ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்ட அதேவேளை மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும்  சுதந்திர ஊடக அமைப்பின் பொருளாளருமான தாஹா முஸம்மில் பயிற்சி நிகழ்ச்சிகளை ஒருங்கிணைப்பு செய்ததோடு மீடியா போரத்தின் உப பொருளாளர் ஜாவீத் முனவ்வர் செயற்பாட்டு நிகழ்ச்சிகளை நடாத்தினார். 


இந்த பயிற்சி பட்டறை மூலம் ஆராயப்பட்ட விடயங்களை அமுல்படுத்தும் வகையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கான செயற்பாடுகள் குறித்த திட்ட வரைபொன்று தயாரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இப்பயிற்சி பட்டறையின் இறுதி அமர்வில் இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் ரீஸா ஹமீதுல்லா கலந்து சிறப்பித்தார்.