Skip to main content

Posts

Showing posts from August, 2019

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஊடக அமைப்புக்களுடனான நல்லெண்ண சந்திப்பு

புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த ஹஜ்ஜூப் பெருநாள் ஒன்று கூடல் மற்றும் ஊடக அமைப்புக்களுடனான நல்லெண்ண சந்திப்பு 19ஆம் திகதி திங்கட்கிழமைகொழும்பில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் தலைமையில்   கொழும்பு 5, கிருல வீதியில் அமைந்துள்ள இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்த ஒன்று கூடலில் இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவர் குமார் நடேசன் , இலங்கை இதழியல் கல்லூரியின் பணிப்பாளர் ஷான் விஜேதுங்க உட்பட பிரதான ஏழு ஊடக அமைப்புக்களின் தலைவர்கள் , செயலாளர்கள் , பொருளாளர்கள் , ஏற்பாட்டாளர்கள் மற்றும் பிரதிநிதிகள் பலரும் கலந்து சிறப்பித்தனர். இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வு , நல்லிணக்கம் , ஐக்கியம் மற்றும் ஒருமைப்பாட்டை மேலும் வ லி யுறுத்தும் வகையில் புனித ஹஜ்ஜூப் பெருநாளை முன்னிட்டு போரத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் நாட்டின் தற்போதைய நிலைமையில் சகல ஊடக அமைப்புக்களும் கடந்த காலங்களை போன்று எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து செயற்படுவதன் முக்கிய

பெண் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் மூலோபாய திட்டமிடல் பயிற்சி பட்டறை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான மூலோபாய திட்டமிடல் தொடர்பான இரண்டு நாள் பயிற்சி பட்டறை கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் (03 & 04.08.2019) கொழும்பில்  இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற இப்பயிற்சி பட்டறையில் மீடியா போரத்தின் சகல செயற்குழு உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்தல், உறுப்பினர்களுக்கான செயற்பாடுகளை அதிகரித்தல் மற்றும் நலன்புரி திட்டங்களை வகுத்தல், ஊடக மற்றும் சமூக சிவில் அமைப்புகளுடன் இணைந்து செயற்படுதல் போன்ற முக்கிய விடயங்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது. மேற்படி மூலோபாய திட்டமிடல் பயிற்சி பட்டறையின் வளவாளர்களாக IREX நிறுவனத்தின் பிரதிப் பொறுப்பாளர் எம். சீ. ரஸ்மின், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும் IMS எனும் சர்வதேச ஊடக ஒத்துழைப்பு நிறுவனத்தின் ஆலோசகரருமான கலாநிதி ரங்க கலன்ஸூரிய, சமூக ஊடக செயற்பாட்டாளர் நாலக்க குணவர்தன,  மீடியா