கடந்த ஞாயிற்றுக்கிழமை (21.04.2019) கொழும்பு உட்பட நாட்டின் பல பாகங்களிலும் மூன்று கத்தோலிக்க தேவலாயங்கள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்களை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்களை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மிக வன்மையாக கண்டிக்கின்றது. நாட்டு மக்கள் அனைவரையும் பேரதிர்ச்சியிலும் பெரும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ள இந்த கொடூரமான தாக்குதல்களில் சிக்கி உயிர்களை இழந்த, படுகாயமடைந்த சகோதரர்களின் உறவுகளுக்கும் கத்தோலிக்க சமூகத்தினருக்கும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த கவலையையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. நாட்டில் 30 வருட காலமாக புரையோடிப் போயிருந்த உள்நாட்டு யுத்தத்தினால் எமது தாய்நாடு இழந்த உயிர்களும் அழிந்த உடைமைகளும் ஏராளம். இனியும் அப்படியொரு நிலை இந்த நாட்டில் ஏற்பட்டு விடக் கூடாது. யுத்தம் முடிவுக்கு கொண்டு வர்ப்பட்டதையடுத்து சகவாழ்வு, மத நல்லிணக்கம் தொடர்பில் சகல இனங்களும் கூடுதல் கரிசனை செலுத்தி வருகின்ற இவ்வேளையில் இந்த கொடூரமான தாக்குதல்கள் நாட்டை அழிவுக்கே இட்டுச் செல்லும். எனவே, இந்தத் தாக்குதல்களை மேற்கொண்ட, இதற்குத் துணைபோன குற்