A+ A-

இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய செய்திப் பணிப்பாளராக ஜூனைத் எம் ஹாரீஸ் நியமனம் - மீடியா போரம் வாழ்த்து







இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் புதிய செய்திப் பணிப்பாளராக ஜூனைத் எம் ஹாரீஸ்  நியமிக்கப்பட்டுள்ளார். நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் பணிப்புரைக்கமைய இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. புத்தளம் தாராக்குடிவில்லு பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர்இ கொழும்பு பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் கலைமாணிப்பட்டம் பெற்றவராவார்.

சர்வதேச உறவூகள் தொடர்பான கற்கையில் முதுமாணிப் பட்டம் பெற்ற இவர். மூன்று மொழிகளிலும் நிபுணத்துவ அறிவூபெற்றவராவார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உறுப்பினரும் வளவாளருமான இவருக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கலாபூஷணம் என். எம். அமீன் உட்பட போரத்தின் நிறைவேற்றுக் குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.