A+ A-

லைப் டோக்ஸ் நிகழ்ச்சியில் மீடியா போரத்தின் தலைவர் பங்கேற்பு



ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவூன்ஸில் ஒப் ஸ்ரீலங்காவின் தலைவரும் நவமனி பத்திரிக்கையின் பிரதம ஆசிரியரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான கலாபூஷணம் எம் எம் அமீன் கலந்து சிறப்பித்த தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் லைப் டோக்ஸ் நிகழ்ச்சி நேற்று 2019.02.06ஆம் திகதி நடைபெற்றது.

கொழும்பிலுள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு பிகாஸ் நிறுவனத்தின் தலைவர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான தலைமை தாங்கினார்.

பல்வேறு துறைசார்ந்தவர்கள்இ புத்திஜீவிகள் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்ட இந்நிகழ்வில் என் எம் அமீன் அவர்கள் தனது அனுபவங்களை உணர்வூபூர்வமாக பகிர்ந்துகொண்டார்.

ஒம்செட் நிறுவனம் முஸ்லிம் சமய கலாச்சார திணைக்களத்துடன் ஆறாவது அமர்வாக ஏற்பாடு செய்த இந்த லைப் டோக்ஸ் நிகழ்வில் இம்முறை பேச்சாளராக கலந்துகொண்ட போரத்தின் தலைவர் என். எம் அமீன்  அவர்களுக்கான ஞாபகச் சின்னத்தை அவரது புதல்வாரன பி பி சி செய்திச் சேவையின் இலங்கை ஊடகவியலாளர் அஸாம் அமீன் வழங்கி வைத்தமை அனைவரினதும் வரவேற்பையூம் பெற்றது. 

இந்த நிகழ்வின் இறுதியில் ஒம்செட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் புனித ரமழான் காலத்தில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அமைசமாகும்