இனங்களுக்கிடையில் சகவாழ்வை மேம்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் இலங்கையிலுள்ள துருக்கி தூதுவராலயத்துடன் இணைந்து மாவனல்லை, ஹிங்குல மாணிக்காவ சிங்கள கணிஷ்ட வித்தியாலயத்தில் கல்விபயிலும் சுமார் 150 மாணவ மாணவிகளுக்கு பாதணிகளை கடந்த 21.02.2019 அன்று கையளித்தது.
மேற்படி கல்லூரி அதிபர் சேனாநாயக்க பண்டா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹதார் மாணவ மாணவிகளுக்கான பாதணிகளுக்கான வவுச்சர்களை வழங்கிவைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச ஆசிரிய ஆலோசகர் மென்டேரிகம சங்கரத்ன தேரர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், வலயக் கல்விப் பணிப்பாளர் நிரோஸா பெர்னாண்டோ மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லீம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
படங்கள் : அஷ்ரப் ஏ. ஸமத்