A+ A-

கலாபூஷணம் விருது பெற்ற போரத்தின் மூன்று உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்

2018ஆம் ஆண்டிற்கான அரச கலாபூஷணம் விருதை பெற்ற தனது மூன்று சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துக்களையூம் பாராட்டுக்களையூம் தெரிவித்துக் கொள்கின்றது.
சிரேஷ்ட ஊடகவியலாளர் மருதமுனை பி. எம். எம். ஏ காதர்இ கண்டி உடுதெனியவை பிறப்பிடமாகவூம் கொழும்பை வசிப்பிடமாகவூம் கொண்ட சுதந்திர ஊடகவியலாளரும் சிரேஷ்ட சட்டதரணியூமான ரஷீட் எம் இம்தியாஸ மற்றும் மினுவங்கொடையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரான மௌலவி ஐ. ஏ. காதிர் கான் ஆகியோரே கொழும்பு தாமரை தடாகத்தில் கடந்த 2019 ஜனவரி 29ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் நடைபெற்ற அரச கலாபூஷணம் விருது வழங்கும் நிகழ்வில் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.
மேற்படி விருதை பெற்ற போரத்தின் மூன்று சிரேஷட உறுப்பினர்களுக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் கலாபூஷணம் என். எம். அமீன் உட்பட போரத்தின் நிறைவேற்றுக் குழு தனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.