யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் நடராஜா குகராஜா (குகன்) மீது நடாத்தப்பட்ட தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவது சகலரதும் பொறுப்பாகும் என்றும் வலியுறுத்தியுள்ளது. இத் தாக்குதல் சம்பவத்தைக் கண்டித்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 'டான்' தொலைக்காட்சி நிறுவனத்தின் செய்தியாளர் குகன் என்றழைக்கப்படும் நடராஜா குகராஜா பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி, காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த 19 ஆம் திகதி நிகழ்வொன்றில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த சமயமே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கோப்பாய் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியே தன் மீது தாக்குதல் நடத்தியதாக அவர் தெரிவித்துள்ளார். இந் நிலையில் இச் சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். போர் நடைபெற்ற காலப் பகுதியில் ஏராளமான ஊடகவியலாளர்கள் வடக்கில் கொல்