Skip to main content

Posts

Showing posts from December, 2018

Essay Competition organised by Turkish Embassy in cooperation with Sri Lanka Muslim Media Forum - 2018

The Turkish Embassy in Colombo with the cooperation of the Sri Lanka Muslim Media Forum (SLMMF) will organise an essay competition with the aim of rewarding career journalists and prospective journalists for their knowledge in International Relations. The competition is open to career journalists and students of journalism. The topic of the essay is “ Turkey and her role in the region and the world as a regional power ”. The essays should be written only in  English , and the word count should be  between 750 and 1,000 words. Please send your essays on or before  31 st  December 2018 , along with you contact details and documents to prove your studentship or employment at a media institution, to the Sri Lanka Muslim Media Forum either by post to “ Sri Lanka Muslim Media Forum, 41/2, Vijitha Road, Nedimala, Dehiwala ”, or by email to  muslimmediaforum@gmail.com . If you are sending your essays via email, please write in the subject line, “Essay Competition” followed by your name.

துருக்கி தூதரகமும் முஸ்லிம் மீடியா போரமும் இணைந்து நடத்தும் கட்டுரைப் போட்டி - 2018

கொழும்பிலுள்ள துருக்கி தூதரகம் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்துடன் இணைந்து ஊடகவியலாளர்க ள்  மற்றும் எதிர்கலாத்தில்  ஊடகவியலாளர்களாக  வர எதிர்பார்ப்பவர்களின் சர்வதேச உறவுகள் தொடர்பான அறிவை விருத்தி செய்யும் நோக்கத்தின் ஓர் அங்கமாக கட்டுரை போட்டி ஒன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. ஊடகவியலாளர்களாக பணிபுரிபவர்கள் மற்றும் ஊடகவியல் கல்வியை தொடரும் மாணவர்கள் இந்த கட்டுரைப் போட்டியில் கலந்துகொள்ள முடியும். " பிராந்திய சக்தியாக உலகிலும் பிராந்தியத்திலும் ;  துருக்கியு ம் அதன் வகிபாகமும்"  (Turkey and her role in the region and the world as a regional power)  எனும் தலைப்பில் இந்த கட்டுரை அமைய வேண்டும். கட்டுரைகள் ஆங்கிலத்தில் மாத்திரம் எழுதப்படவேண்டும் என்பதுடன்  750  மற்றும்  1000  சொ ற்களுக்குள் அமைய வேண்டும். ஊடகவியலாளராயின் தான் ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்தும் ஆவணங்களையும் ஊடக கற்கைகளை மேற்கொள்ளும் மாணவர்களாயின் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களையும் தங்களால் எழுதப்பட்ட கட்டுரைகளுடன்  இணைத்து  2018  டிசம்பர் மாதம்  31 ம் திகதிக்கு முன்னர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீட

மாவனல்லையில் நடைபெற்ற கருத்தரங்குகளும் பாராட்டு நிகழ்வுகளும்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஏற்பாடு செய்த இரு ஊடக செயலமர்வுகள் மாவனல்லை ஆஇஷா சித்தீகா மற்றும் மாவனல்லை சாஹிரா ஆகிய பாடசாலைகளில் கடந்த (01.12.2018) சனிக்கிழமை அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மாவனல்லையில் இடம்பெற்றது. மாவனல்லை ஆஇஷா சித்தீகா மாணவிகளுக்கான செயலமர்வு ஆஇஷா சித்தீகா பெண்கள் கலாசாலையிலும் மற்றும் மாவனல்லை வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில் தெரிவு செயப்பட்ட மாணவர்களுக்கான செயலமர்வு சாஹிரா கல்லூரி பழைய மாணவர் ஊடக சங்கத்துடன் இணைந்து  சாஹிரா ஆரம்ப வித்தியாலய கேட்போர் கூடத்திலும் இடம்பெற்றது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெற்ற போரத்தின் 61 மற்றும் 62 ஆவது செயலமர்வுகளில் நாட்டில் அனுபவம் வாந்த முன்னணி  ஊடகவியலாளர்களால் விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் வழங்கப்பட்டன. ஓய்வு பெற்ற அதிபரும் சிரேஷ்ட அறிவிப்பாளருமான ஏ.ஆர்.எம் ஜிப்ரி,  முன்னாள் உபபீடாதிபதியும் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான கலைவாதி கலீல், சிரேஷ்ட ஊடகவியலாளர் தாஹா முஸம்மில்,  விடிவெள்ளி ஆசிரியர் எம்.பி.எம். பைரூஸ், அல் - ஹஸனாத் ஆசிரியர் ஜெம்சித் அஸீஸ்,  ஊடகவியலாளர்

திருமதி புர்கார் பீ இப்திகாரின் கணவர் காலமானார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவியும் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன சிரேஷ்ட அறிவிப்பாளரும் எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமதி புர்கான் பீ இப்திகார் அவர்களின் கணவர் அல்ஹாஜ் எம் எச் எம் இப்திகார் (வயது 70) இன்று காலமானார் இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன் அன்னாரின் ஜனாஸா இலக்கம் 101 நவரட்ன ஜெயவீர மாவத்த கித்தம்பஹூவ வெள்ளம்பிட்டிய இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு இன்ஷா அல்லாஹ் இன்று ( 03.12.2018) அஸருக்கு பின்னர் மாளிகாவத்தை முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். கொழும்பு 12 வாழைத்தோட்டத்தை பிறப்பிடமாகக் கொண்ட மர்ஹூம் எம் எச் எம் இப்திகார் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். சுமார் ஐந்து ஆண்டுகளாக சுகயீனமுற்றிருந்த நிலையிலேயே இன்று காலமானார். அன்னாரது மறைவு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது மறுமை வாழ்வுக்காக பிரார்திப்பதாக மீடியா போரத்தின் தலைவர் என் . எம் . அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார் .