Skip to main content

SLMMF அங்கத்தவர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் முஸ்லிம் ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற் கொண்டு ஊடக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நாளை (09) நடைபெறவுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நாளை (2018.11.09ஆம் திகதி) பிற்பகல் 3.00 மணிக்கு கொழும்பு 07, இலக்கம் 24, ஹோடர்ன் பிளேசிலுள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவன கேட்போர்கூடத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்துஹாதர் பிரதம அதிதியாகவும் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கௌரவ அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் துருக்கி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க இலங்கையிலுள்ள முஸ்லிம் ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை கருத்திற் கொண்டு இலங்கைக்கான துருக்கி தூதரகமும் துருக்கி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையமும் (Turkish Cooperation and Coordination Agency – TIKA) இந்த ஊடக உபகரணங்களை வழங்கியுள்ளன.  

முஸ்லிம் ஊடகவியலாளர்களிடமிருந்து பகிரங்கமாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய முஸ்லிம்  மீடியா போரம் மற்றும் துருக்கி தூதரகத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய சுயாதீன தெரிவுக்குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு இவ்உபகரணங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது