Skip to main content

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா பேரம் - துருக்கி தூதரகம் இணைந்து ஊடக உபகரணங்கள் வழங்கி வைப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில்  ஊடகவியலாளர்களின் துறைசார் மேம்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ஊடக உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த 09.11.2018ம் திகதி  வெள்ளிக்கிழமை கொழும்பு-07, ஹோர்டன் பிளேசிலுள்ள உள்ள லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் துன்ஜா ஒஸ்துகாதர் கலந்து கொண்டதுடன்,  விஷேட பேச்சாளராக அகில இலங்கை ஜம் இயதுல் உலமா சபையின் இளைஞர் அமைப்பின் செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித் கலந்து கொண்டிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் துருக்கி அரசாங்கத்திடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கைக்கான துருக்கி தூதரகமும் துருக்கி ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவர் நிலையமும் (Turkish Cooperation and Coordination Agency - TIKA)  இந்த ஊடக உபகரணங்களை வழங்கியிருந்தது.

அங்கத்தவர்களிடமிருந்து பகிரங்கமாக கோரப்பட்ட விண்ணப்பங்களுக்கமைய ஸ்ரீலங்கா முஸ்லிம்  மீடியா போரம் மற்றும் துருக்கி தூதரகத்தினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய சுயாதீன தெரிவுக்குழுவின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, 17 ஊடகவியலாளர்களுக்கு மடிக் கணினிகளும், 33 ஊடகவியலாளர்களுக்கு காமெராக்களுமாக 50 ஊடகவியலாளர்களுக்கும் 05 ஊடக நிறுவனங்களுக்கும் இந்த உபகரணங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

நவமணி, எங்கள்தேசம், மீள்பார்வை, டெலி சிலோன், ஆகிய நான்கு ஊடக நிறுவனங்களுக்கும் கமெராக்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதோடு, ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்துக்கு மடிக் கணினி மற்றும் கமெராவும் வழங்கப்பட்டன.

கௌரவ அதிதிகளாக மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, நகரத் திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், நுஆ கட்சியின் தலைவர் அஸாத் சாலி, முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர்மாக்கார், புரவலர் ஹாசிம் உமர், பலஸ்தீன், ஈரான், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளின் இராஜதந்திரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது ஜம்இயத்துஷ் - ஷபாப் பணிப்பாளர் எம்.எஸ்.எம்.தாஸிம் மௌலவி கிராஅத் ஓதி நிகழ்வை ஆரம்பித்து வைக்க, வரவேற்புரையை போரத்தின் உப தலைவர் அஸ்கர் கானும், தலைமையுரை என்.எம். அமீன்,  விஷேட உரை அகில இலங்கை ஜம் இயதுல் உலமா சபையின் இளைஞர் அமைப்பின் செயலாளர் அஷ்-ஷெய்க் அர்கம் நூராமித் மற்றும் நன்றியுரையை பொதுச் செயலாளர் என்.ஏ.எம். ஸாதிக் ஷிஹானும் வழங்கினர்.

















Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது