ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் இந்திய, சென்னை இணைப்பாளரான எம்.கே. ஷாஹுல் ஹமீதின் அன்புத் தாயார் ஹாஜியானி உம்மு ஹபீபா இன்று சென்னையில் காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.! அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மணப்பாறை அடுத்த புத்தாநத்தம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரது மறைவு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு அன்னாரது மறுமை வாழ்வுக்காக பிரார்திப்பதாக மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் தெரிவித்துள்ளார். இந்திய - இலங்கை முஸ்லிம்களின் நல்லுறவை கட்டியெழுப்புவதில் எம்.கே. ஷாஹுல் ஹமீத் ஊடகத்துறை ஊடாக பங்காற்றி வருவதுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் சென்னை இணைப்பாளராக செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.