
தேசிய
மற்றும் பிராந்திய ஊடகங்களுக்காக கடமையாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக
பயிற்சிகளை வழங்கிவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், அவர்களது அறிக்கையிடலுக்கு
அவசியமான ஊடக உபகரணங்களை வழங்கி உதவுவதன் மூலம் அவர்களை மேலும் இத்துறையில் வலுப்படுத்துவதை
நோக்காகக் கொண்டே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது.
அதற்கமைய
பின்வரும் தகைமைகளைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர்கள் இந்த
ஊடக உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும். கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள்
சுயாதீன குழுவொன்றினால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அவசியமேற்படின் நேர்முகப்பரீட்சை
நடாத்தப்பட்டு பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர்.
எதிர்பார்க்கப்படும்
தகைமைகள் :
- ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவராக இருத்தல்.
- ஊடக நிறுவனம் ஒன்றில் முழு நேர அல்லது பகுதி நேர ஊடகவியலாளராக / நிருபராக கடமையாற்றுதல்.
- 5 வருடங்களுக்கு மேற்பட்ட ஊடகத்துறை அனுபவத்தை கொண்டிருத்தல்.
- தகவல் திணைக்களத்தினால் வழங்கப்படும் ஊடக அடையாள அட்டையை பெற்றிருத்தல்.
- ஊடக உபகரணம் ஒன்றை இலவசமாக பெற்றுக்கொள்ள வேண்டிய பொருளாதார தேவையுடையவராக இருத்தல்.
விண்ணப்ப
முடிவுத் திகதி : 14.09.2018
விண்ணப்பப்படிவத்தை
கீழுள்ள இணைப்பில் பதிவிறக்கம் செய்து, அவற்றை நிரப்பி தபால் மூலம் அனுப்பிவைக்க வேண்டும்.
விண்ணப்பங்களை
அனுப்ப வேண்டிய முகவரி:
SRI LANKA MUSLIM
MEDIA FORUM, No: 41/2, Vijitha Road, Nedimala, Dehiwala