Skip to main content

மீடியா போரத்தின் உபதலைவர் எம்.பி.எம். பைறூஸ் ஐ.நா. பயிற்சி நெறிக்காக நியூயோர்க் பயணம்

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தினால் நடாத்தப்படும் இளம் ஊடகவியலாளர்களுக்கான 'ரெஹாம் அல் பர்ரா' (Reham Al Farra Fellowship) புலமைப்பரிசில் திட்ட பயிற்சி நெறியில் பங்கேற்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவரும்  'விடிவெள்ளி' பத்திரிகையின் ஆசிரியருமான எம்.பி.எம். பைறூஸ், நாளை (14) நியூயோர்க் பயணமாகிறார்.

ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துடன் இணைந்ததாக நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் இம்மாதம் 17 ஆம் திகதி  முதல் மூன்று வார காலத்திற்கு இப் பயிற்சி நெறி நடைபெறவுள்ளது.

உலகளாவிய ரீதியில்  விண்ணப்பித்த 650 இளம் ஊடகவியலாளர்களிலிருந்து 14 பேர் இப்பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய 18 வருடங்களின் பின்னர் இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் இப் பயிற்சி நெறியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.

குவைத், புரூண்டி, நிகரகுவா, ஆப்கானிஸ்தான், துருக்கி, தன்சானியா, வெனிசுவேலா, கென்யா, இந்தியா, நைஜீரியா, சேர்பியா, உகண்டா, கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்தும் இளம் ஊடகவியலாளர்கள் இப் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இப் பயிற்சி நெறியின் பங்குபற்றுனர்கள் ஐ.நா. பொதுச் செயலாளர் உட்பட ஐ.நா. நிறுவனங்களின் தலைவர்களை சந்திக்கவுள்ளதுடன் நியூயோர்க்கிலுள்ள பிரபல ஊடக  நிறுவனங்களிலும் பயிற்சிகளைப் பெறவுள்ளனர்.

காத்தான்குடியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், காத்தான்குடி அல் ஹிறா மகா வித்தியாலயம், மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி, இலங்கை இதழியல் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரும் இலங்கை - பலஸ்தீன் நட்புறவுச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினருமாவார்.

இவர் கவிமணி மௌலவி எம்.எச்.எம். புஹாரி (பலாஹி), ஆயிசா உம்மா தம்பதியின் புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது