Skip to main content

Posts

Showing posts from September, 2018

முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹானின் தாயார் காலமானார்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளரும் பாதுகாப்பு அமைச்சின் தமிழ் பிரிவுக்கான ஊடக இணைப்பாளருமான ஸாதிக் ஷிஹானின் அன்புத்தாயார் இரிபா தனது 65வது வயதில் காலமானார்.  5 பிள்ளைகளின் அன்புத்தாயாரான அவர் சுகயீனமுற்றிருந்த நிலையில் இன்று (19) அதிகாலை காலமானார்.  அன்னாரது ஜனாஸா இல. 40 மார்டீஸ் லேன், கெசெல்வத்த, கொழும்பு 12, இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று (19) பிற்பகல் 3.30 மணிக்கு குப்பியாவத்த மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.  அன்னாரது மறைவு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்தித்துக்கொள்கிறது. 

முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீனுக்கு சமாதான தூதுவர் விருது வழங்கி கௌரவிப்பு

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீ லங்கா தலைவரும், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியருமான சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன் சமாதான தூதுவர் (Ambassador of Peace – 2018) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். சமாதான கற்கைகளுக்கான மையம் (Centre for Peace Studies) ஏற்பாடு செய்த சர்வதேச சமாதான மாநாடு இன்று (18.09.2018) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. இதன்போதே சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீனுக்கு சமாதான தூதுவர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மீடியா போரத்தின் உபதலைவர் எம்.பி.எம். பைறூஸ் ஐ.நா. பயிற்சி நெறிக்காக நியூயோர்க் பயணம்

ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தினால் நடாத்தப்படும் இளம் ஊடகவியலாளர்களுக்கான 'ரெஹாம் அல் பர்ரா' (Reham Al Farra Fellowship) புலமைப்பரிசில் திட்ட பயிற்சி நெறியில் பங்கேற்க ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவரும்  'விடிவெள்ளி' பத்திரிகையின் ஆசிரியருமான எம்.பி.எம். பைறூஸ், நாளை (14) நியூயோர்க் பயணமாகிறார். ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்துடன் இணைந்ததாக நியூயோர்க் நகரிலுள்ள ஐ.நா. தலைமையகத்தில் இம்மாதம் 17 ஆம் திகதி  முதல் மூன்று வார காலத்திற்கு இப் பயிற்சி நெறி நடைபெறவுள்ளது. உலகளாவிய ரீதியில்  விண்ணப்பித்த 650 இளம் ஊடகவியலாளர்களிலிருந்து 14 பேர் இப்பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய 18 வருடங்களின் பின்னர் இலங்கை ஊடகவியலாளர் ஒருவர் இப் பயிற்சி நெறியில் பங்குபற்றும் வாய்ப்பைப் பெற்றுள்ளார். குவைத், புரூண்டி, நிகரகுவா, ஆப்கானிஸ்தான், துருக்கி, தன்சானியா, வெனிசுவேலா, கென்யா, இந்தியா, நைஜீரியா, சேர்பியா, உகண்டா, கம்போடியா ஆகிய நாடுகளிலிருந்தும் இளம் ஊடகவியலாளர்கள் இப் பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப் பயிற்சி நெறியின் பங்குபற்றுனர்கள

SLMMF அங்கத்தவர்களுக்கு ஊடக உபகரணங்கள் வழங்கும் திட்டம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்  அங்கத்தவர்களுக்கு ஊடக உபகரணங்களை வழங்குவதற்கு தகுதிவாய்ந்த முஸ்லிம் ஊடகவியலாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. தேசிய மற்றும் பிராந்திய ஊடகங்களுக்காக கடமையாற்றும் முஸ்லிம் ஊடகவியலாளர்களுக்கு தொடர்ச்சியாக பயிற்சிகளை வழங்கிவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், அவர்களது அறிக்கையிடலுக்கு அவசியமான ஊடக உபகரணங்களை வழங்கி உதவுவதன் மூலம் அவர்களை மேலும் இத்துறையில் வலுப்படுத்துவதை நோக்காகக் கொண்டே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளது. அதற்கமைய பின்வரும் தகைமைகளைக் கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவர்கள் இந்த ஊடக உபகரணங்களைப் பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்க முடியும். கிடைக்கப்பெறும் விண்ணப்பங்கள் சுயாதீன குழுவொன்றினால் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அவசியமேற்படின் நேர்முகப்பரீட்சை நடாத்தப்பட்டு பயனாளிகள் தெரிவு செய்யப்படுவர். எதிர்பார்க்கப்படும் தகைமைகள் : ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் அங்கத்தவராக இருத்தல். ஊடக நிறுவனம் ஒன்றில் முழு நேர அல்லது பகுதி நேர ஊடகவியலாளராக / நிருபராக கடமையாற்றுதல். 5 வருடங்களுக்கு