ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பதில் தலைவராக போரத்தின் உப தலைவர்களில் ஒருவரும் விடிவெள்ளி ஆசிரியருமான எம். பி. எம். பைறூஸ் நியமிக்கப்பட்டுள்ளார். போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என். எம். அமீன் புனித ஹஜ் கடமையை நிறைவேற்றும் பொருட்டு சவூதி அரேபியாவுக்கு சென்றுள்ளதாலும் உப தலைவர்களில் ஒருவரான எஸ். ஏ. அஸ்கர் ஐரோப்பிய நாடுகளுக்கான தனிப்பட்ட விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ளதாலுமே மற்றுமொரு உப தலைவர்களில் ஒருவரான எம். பி. எம். பைறூஸ் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்தார். 2018 ஆகஸ்ட் மாதம் 18ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள எம். பி. எம். பைறூஸ் தலைவர் ஹஜ் கடமைகளை நிறைவூ செய்து கொண்டு எதிர்வரும் 28ஆம் திகதி நாடு திரும்பும் வரை பதில் தலைவராக செயற்படவுள்ளதாக செயலாளர் மேலும் தெரிவித்தார்.