Skip to main content

முஸ்லிம் மீடியா போரத்தின் மாநாட்டில் கல்வி சமூகம் சார்ந்த பங்களிப்புக்காக 9 பேர் பாராட்டி கௌரவிப்பு

எதிர்வரும் 21ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடைபெறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 21ஆவது வருடாந்த மாநாட்டில் சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்த இரு பிரமுகர்கள் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதுடன் மற்றும் நீண்ட காலம் ஊடகத்துறையில் பணிபுரிந்த 07 சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் அடங்களாக 9 பேருக்கு அவர்களின் ஊடகப் பணிக்காக விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.


பேராதனைப் பல்கலைக் கழக அரபு, இஸ்லாமிய நாகரீகத்துறை முன்னாள் முதுநிலை விரிவுரையாளரும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவரும் மார்க்க அறிஞருமான மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம் (எம்.ஏ) மற்றும் சிங்களத்தில் இஸ்லாமிய பணி புரிந்துவரும் தஹ்லான் மன்சூர் ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இது தவிர நீண்டகாலம் ஊடகப் பணி புரிந்த ஹம்ஸா ஹனீபா, தயா லங்காபுர, ரீ. ஞானசேகரன், எம்.இஸட். அஹமத் முனவ்வர், எம்.ஐ.எம். சம்சுடீன், மௌலவி எஸ்.எம்.எம். முஸ்தபா, திருமதி ஸகிய்யா சித்திக் பரீத் ஆகிய சிரேஷ்ட ஊடகவியலாளர்களின் ஊடகத் துறைப் பங்களிப்பை பாராட்டி விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.

இம்மாநாடு காலை 9.00 மணிக்கு கொழும்பு - 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

போரத்தின் தலைவர் என். எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா  ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே.எம்.ஏ. முஹம்மத் அபூபக்கர் விசேட பேச்சாளராகவும் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

மாநாட்டின்போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

இதன்போது Media Directory இன் 6ஆவது பதிப்பு வெளியிடப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : போரத்தின் சகல உறுப்பினர்களுக்குமான அழைப்பிதழ் தபால் மூலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.  எனினும் அழைப்பிதழ் கிடைக்காத உறுப்பினர்கள் இருப்பின், அவர்கள் 0773112561, 0777874983 எனும் இலக்கங்கள் ஊடாக தமது வரவை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். 

- எம்.எஸ்.எம்.ஸாகிர் -


Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது