Skip to main content

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக்குழுவுக்கு 32 பேர் போட்டி

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த பொதுக் கூட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.00 மணிக்கு கொழும்பு – 05 நாரஹேன்பிட்டி, பொல்ஹென்கொட இலக்கம் 163, கிருலபன எவன்யூவில் அமைந்துள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் புதிய கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.

போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாஷிம் பிரதம அதிதியாகவும், நிதி மற்றும் வெகுசன ஊடக பிரதியமைச்சர் லசந்த அழகியவன்ன, முன்னாள் வெளிவிவகார அமைச்சரும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், துருக்கி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் துன்கா ஓஸ்சுஹதார் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ் நாடு கடையநல்லூர் சட்ட மன்ற உறுப்பினருமான கே. எம்.ஏ.முஹம்மத் அபூபக்கர், சமூக விஞ்ஞான அறிவியல் அறிஞரும், எழுத்தாளருமான புரவலர் எம். ஜே. முஹம்மத் இக்பால் மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி சுதர்ஷன குணவர்தன ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பொதுக்கூட்டத்தின் போது ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 2018/2020 ஆம் ஆண்டிற்கான புதிய நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் தெரிவு இடம்பெறவுள்ள அதேசமயம், தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கு எவரும் போட்டியிடாததன் காரணமாக மேற்படி நிர்வாக ஆண்டிற்கான தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் என்.எம். அமீன், பொதுச் செயலாளராக என்.ஏ. எம். ஸாதிக் ஷிஹான், பொருளாளராக அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ் ஆகியோர் போட்டிகள் இன்றி ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நிறைவேற்றுக் குழுவிற்கு பதினைந்து பேர் உறுப்பினர்களாக தெரிவு செய்யப்படவுள்ளனர். இதற்காக 32 பேர் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர். இதற்கான தெரிவு பொதுக் கூட்டத்தின் போது வாக்களிப்பு மூலம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நிறைவேற்றுக் குழுவிற்கு போட்டியிடுவோர் விபரங்கள் பின்வருமாறு :-
 1. அல்ஹாஜ் எம். ஏ. எம். நிலாம் (லேக் ஹவுஸ்)
 2. அல்ஹாஜ் எம். இஸட். அஹமத் முனவ்வர் (வானொலி)
 3. ஜனாப் எஸ். ஏ. அஸ்கர் கான் (நொலேட்ஜ் பொக்ஸ்)
 4. அல்ஹாஜ் ஹில்மி மொஹம்மட் (அமைச்சு ஊடக பிரிவு)
 5. மௌலவி எஸ். எம். எம். முஸ்தபா (பிராந்திய ஊடகவியலாளர்)
 6. அல்ஹாஜ் ஜாவிட் முனவ்வர் (வானொலி)
 7. அல்ஹாஜ் கலைவாதி கலீல் (நவமணி)
 8. ஜனாப் எம். பி. எம். பைறூஸ் (விடிவெள்ளி)
 9. திருமதி புர்கான் பீ. இப்திகார் (வானொலி)
 10. ஜனாப் பியாஸ் முஹம்மட் (மீள்பார்வை)
 11. ஜனாப் ஏ. ஜே. எம். பிரோஸ் (நவமணி/அமைச்சு ஊடக பிரிவு)
 12. ஜனாப் நுஸ்கி முக்தார் (டெய்லி சிலோன்)
 13. ஜனாப் எம்.எப். ரிபாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)
 14. ஜனாப் எஸ். எம். சர்ஜான் (டெய்லி சிலோன்)
 15. திருமதி ஸமீஹா ஸபீர் (தொலைக்காட்சி)
 16. திருமதி ஷாமிலா ஷெரீப் (வானொலி)
 17. அல்ஹாஜ் சுஐப் எம் காசிம் (அமைச்சு ஊடக பிரிவு)
 18. அல்ஹாஜ் ரிப்தி அலி (விடியல் இணைய தளம்)
 19. ஜனாப் எஸ். ஏல். அஸீஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)
 20. ஜனாப் பிஸ்ரின் மொஹம்மட் (யூ.ரி.வி தொலைக்காட்சி)
 21. அஷ்ஷெய்க் ஆதில் அலி சப்ரி (நவமணி)
 22. ஜனாப் ஏ. ஆர் பரீட் (தினகரன்)
 23. ஜனாப் பஸ்ஹான் நவாஸ் (ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்)
 24. ஜனாப் எம். எஸ். எம். ஸாஹிர் (நவமணி)
 25. ஜனாப் ஏ. மொஹம்மட் பாயிஸ் (அரசாங்க தகவல் திணைக்களம்)
 26. ஜனாப் ஐ. எம். இர்ஷாத் (எங்கள் தேசம்)
 27. ஜனாப் ஐ. ரியாஸ் (பிராந்திய ஊடகவியலாளர்)
 28. ஜனாப் அனஸ் அப்பாஸ் (தேசிய ஊடக மையம்)
 29. ஜனாப் எம். லாபிர் (பிராந்திய ஊடகவியலாளர்)
 30. ஜனாப் ஏ. ஆர். முஹம்மட் ரிபாஸ் (வானொலி)
 31. டாக்டர் ஏ. ஆர். ஏ. ஹபீஸ் (அமைச்சு ஊடக பிரிவு)
 32. ஜனாப் பலீலுர் ரஹ்மான் (பிராந்திய ஊடகவியலாளர்)   

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

ABOUT US

Sri Lanka Muslim Media Forum (SLMMF) commenced its journey with only 34 members. on the 09th of June 1995, with a view to bringing together Muslims who are involved in the Print and Electronic Media and also those who are involved in  the mass communication industry in educating, imparting knowledge & skills training of Media Personnel in the country. Sri Lanka Muslim Media Forum has crossed many milestones and has become one of the strongest organizations in this country. It has increased its membership to many folds. Mission  The mission of the SLMMF is to bring together Muslims who are involved in the Print, Electronic and New Media and also those who are involved in the communication industry in educating, imparting knowledge & skills and training of Media Personnel in the country to work towards a set of defined objectives.

Executive Committee and Office Bearers - 2022/2023

Sri Lanka Muslim Media Forum Executive Committee and Office Bearers - 2022/2023   President Mrs. Furkan Bee Ifthikar General Secretary Mr.   M. J Bishrin Mohamed  Treasurer Mr.  Shihar Anees  Immediate Past President  Mr. N.M Ameen National Organizer Moulavi S.M.M.  Musthafa Vice Presidents                                                                             Mr. M.A.M. Nilam Mr. Kalaiwathy Kaleel Assistant Secretaries                                                                  Mr. N.A.M. Sadique Shihan   Mr. Javid Munawwer                                              Asst. Treasurer Mr. J.M. Naalir       Magazine  Editors Mrs. Shamila Sheriff Shums Faahim Head of Training Mrs. sameeha safeer Web Editor Mr. D.G.M.S.M Raafi Media Coordinator   M.S.M Shakir Exco Members  Mr. Thaha Mu zammil AshShaik Jamzith Azeez Mr. M.F. Rifas M.M.Jesmin Mr. Nusky Mukthar C.M.M.Zubair