ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் 22ஆவது வருடாந்த பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் கடந்த சனிக்கிழமை (21.07.2018) கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பெருந்தெருக்கள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் ஹபீர் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். கௌரவ அதிதிகளாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி, பிரதி அமைச்சர் அலிசாஹிர் மௌலானா, பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், துருக்கி நாட்டின் தூதுவர் துன்கா ஒஸ்சுஹதார், பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ், தேசிய ஐக்கிய முன்னணி தலைவர் அசாத் சாலி, சம்மாந்துறை பிரதேசசபை தவிசாளர் நௌசாத் ஆகியோரும் சிறப்பு பேச்சாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ்நாடு கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான எம்.ஏ. முஹம்மத் அபூபக்கரும் கலந்துகொண்டனர். சமூக மேம்பாட்டுக்கும் இன நல்லிணக்கத்துக்கும் பங்களிப்புச் செய்தமைக்காக மௌலவி ஏ.எல்.எம். இப்றாஹிம், தஹ்லான் மன்சூர் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்