Skip to main content

அநீதிக்கெதிராக குரல்கொடுப்பது ஊடகவியலாளர்களின் மகத்தான பணி – சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சி. ரசூல்தீன்

எந்த குறைகளை கண்டாலும் அவற்றுக்கெதிராக குரல்கொடுப்பது ஊடகவியலாளர்களின் மகத்தான பணியாகும் என ரியாத் டெய்லியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சி. ரசூல்தீன் தெரிவித்தார். 

குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவருடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று (25.06.2018) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். மீடியா போரத்தின் தலைவர் என்.எம்  அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு  குறிப்பிட்டார். 

தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர்; ஒரு முறை கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் காலத்தில், சர்ச்சையான ஒரு சினிமா படம் தொடர்பாக இளைஞர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்ததை அடுத்து அதனை கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து குறித்த சினிமா படத்தை தடை செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். 

இதேவேளை, தற்போதைய நவீன உலகில் சமூக ஊடகங்கள் பெரும் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவித்த அவர், ஒரு முறை சீனாவில் நிகழ்வொன்றுக்காக அழைக்கப்பட்டிருந்த ஐந்து ஊடகவியலாளர்களில் தான் மாத்திரமே பத்திரிக்கை ஊடகவியலாளர் எனவும் ஏனையவர்கள் பல மில்லியன் கணக்கானவர்கள்  பின்தொடரும் ட்விட்டர், பேஸ்புக் மற்றும் யூடியுப் சமூக ஊடகவியலாளர்களே கலந்துகொண்டிருந்ததவும் தெரிவித்தார். இவ்வாறான நவீன ஊடகங்களுக்கே தற்பொழுது முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் இந்த துறைகளில் எமது இளைஞர்களையும் ஈடுபடுத்துவது மற்றும் அவற்றுக்கான பயிற்சிகளை வழங்குவது முக்கியமானது என குறிப்பிட்டார். 

சவூதி அரேபியாவில் ஊடகத்துறை வளர்ச்சி தொடர்பில் தெரிவித்த அவர், தற்பொழுது அங்கு பல்வேறு அரசியல் மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றது. முன்பு போன்றல்லாமல் தற்பொழுது சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடுவதற்கான சந்தர்ப்பங்கள் காணப்படுகின்றன. அமேரிக்கா மற்றும் பிரித்தானியா போன்ற நாடுகளில் ஊடகத்துறையில் மாத்திரம் ஆயிரக்கணக்கான சவூதி அரேபிய இளைஞர்கள் கல்வியை பெற்றுவருகின்றனர். இது சவூதி அரேபியாவில் ஊடகத்துறையின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார். மேலும் தற்பொழுது சவூதி அரேபியாவில் பெண்களும் ஊடகத்துறையில் பணியாற்றுவது ஒரு முக்கியமான விடயம் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். 

இதேவேளை, இலங்கையில் ஊடகத்துறையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் முக்கியத்துவம் தொடர்பில் தெரிவித்த அவர் எமது இளைஞர்களை சமூக ஊடகத்துறையில் பயிற்றுவிக்க மீடியா போரம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் பாராட்டினார். 

இங்கு கருத்துத் தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், இலங்கை முஸ்லிம்களின் குரலாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் செயற்பட்டு வருவதாகவும் முஸ்லிம்களுக்கு எதிரனாக பிரச்சினைகளின் போது அவற்றை ஊடகங்கள் வாயிலாக வெளிக்கொண்டுவர மீடியா போரம் செயற்படுவதாக தெரிவித்தார். இளைஞர்களை ஊடகத்துறையில் பயிற்றுவிக்கும் வகையில் நாடளாவிய ரீதியில் செயலமர்வுகளை நடத்துவதாகவும் முஸ்லிம் மீடியா போரம் குறைந்த வளங்களை கொண்டே இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

இதேவேளை, இந்நிகழ்வி போது ரியாத் டெய்லியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சி. ரசூல்தீனை ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர் எம்.ஏ.எம். நிலாம் பொன்னாடை போர்த்தி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கது

- நுஸ்கி முக்தார் -






Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

முல்லைத்தீவு, கந்தளாயில் ஊடகவியலாளர்கள் தாக்குதல் - ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் கண்டனம்

  திருகோணமலை மற்றும் முல்லைத்தீவு பிரதேசங்களில் ஊடகப் பணியில் ஈடுபட்ட மூன்று ஊடகவியலாளர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றது.   முல்லைத்தீவு மாவட்டத்தில் முறிப்பு என்ற காட்டுப்பகுதியில் மோசடி மர வியாபாரம் குறித்து தகவல்களைத் திரட்டச் சென்ற பிராந்திய ஊடகவியலாளர்களான கணபதிப்பிள்ளை குமணன் , மற்றும் சண்முகம் நவசீலன் ஆகிய இருவரும் கடந்த 12 ஆம் திகதி மோசடி வியாபாரிகளால் தாக்கப்பட்டு காயத்துக்குள்ளாகியுள்ளனர்.   தாக்குதல்களினால் காயங்களுக்கு உள்ளான இவர்கள் இருவரும் இப்போது முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேநேரம் திருகோணமலை கந்தளாயில் விபத்து ஒன்றை அறிக்கையிடச் சென்ற ஐ.ரீ.என். செய்தியாளர் எம்.எச். யூசுப்அக்போபற என்ற இடத்தில் காடையர்கள் சிலரது தாக்குதலுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு வந்துள்ளார். அவரது புகைப்பட கருவியும்பறிக்கப்பட்டுள்ளது.   ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற நபர்கள் தொடர்பில்

அரச வானொலி, ரைகம் விருது வென்ற ஊடகவியலாளர்களுக்கு வாழ்த்துகள்

அண்மையில் இடம் பெற்ற அரச வானொலி விருது வழங்கள் நிகழ்வில் சிறந்த நேரலை மாலை நிகழ்ச்சிக்கான விருது வென்ற எமது போரத்தின் உறுப்பினர் கெப்பிடல் எப் எம் யை சேர்ந்த ஏ. எல் ஜபீர்    சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கான ஊக்குவிப்பு சான்றிதழ் பெற்ற போரத்தின் உறுப்பினர் பிறை எப் எம் யை சேர்ந்த நயீம் அஹமட் மற்றும் சிறந்த செய்தி அறிக்கையிடலுக்கான ரைகம் விருது வென்ற ரியாஸ் ஹாரிஸ் ஆகியோருக்கு ஶ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றது