A+ A-

முஸ்லிம் மீடியா போரத்தின் உபதலைவர் நிலாமின் தாயார் காலமானார்


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் உப தலைவர்களில் ஒருவரும் லேக் ஹவுஸ் தமிழ் பிரசுரங்களுக்கான ஆலோசகருமான அல்-ஹாஜ் எம்.ஏ.எம். நிலாம் அவர்களின் அன்புத் தாயார் ஹாஜியானி ஹபீலா உம்மா ஆரிப் இன்று காலமானார். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

7 பிள்ளைகளின் அன்புத்தாயாரான அவர் இறக்கும் போது வயது 95 ஆகும்.

அன்னாரது ஜனாஸா மினுவாங்கொடை, கல்லொழுவை தக்கியா வீதி இல்லத்தில் வைக்கப்பட்டு இன்று இரவு 8.00 மணிக்கு  கல்லொழுவை ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரது மறைவு தொடர்பில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் மறுமை வாழ்வுக்காக பிரார்தித்துக்கொள்கிறது.