A+ A-

மீடியா டயறிக்கான விண்ணப்பக்காலம் எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிப்பு


ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் வருடாந்த மாநாடு (AGM) இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஜூலை மாதம் கொழும்பில் நடைபெறவுள்ளது. அதனை முன்னிட்டு மீடியா டயறியின் (Media Directory) 6வது பதிப்பினை வெளியிட போரத்தின் நிறைவேற்றுக் குழு தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் தெரிவித்துள்ளார்.

அமைச்சுக்கள், அரசாங்க திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் தூதரகங்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் முதலான பல்வேறு முக்கிய தகவல்களை உள்ளடக்கிய இந்த மீடியா டயறியில் வழமை போன்று போரத்தின் அங்கத்தவர்களின் விபரங்கள் உள்ளடக்கப்படவுள்ள அதேசமயம் இதற்கான விண்ணப்பக்காலம் கடந்த 03ஆம் திகதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் தபால் சேவை வேலை நிறுத்தத்தினால் ஏற்பட்டுள்ள தாமதம் காரணத்தினால் மேற்படி விண்ணப்பத்திகதி எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும்  தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மீடியா போரத்தில் அங்கம் வகிக்கும் சகல அங்கத்தவர்களுக்கும் மீடியா டயறி மற்றும் புதிய அடையாள அட்டைக்கான விண்ணப்பப்படிவம் ஏற்கனவே தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர். தபால் சேவையின் தாமதங்கள் காரணமாக இதுவரை விண்ணப்பம் கிடைக்கபெறாதவர்கள் 0773112561 அல்லது 0718030818 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக தன்னுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன் விண்ணப்படிவம் கிடைக்கப்பெற்றவர்கள் விண்ணப்பத்துடன் வர்ணப் புகைப்படத்தையும் இணைத்து மீடியா டயறிக்கான 500 ரூபாவையும், அடையாள அட்டைக்கான 300 ரூபாவையும் Sri Lanka Muslim Media Forum என்ற பெயருக்கு மணியோடர் மூலம் செலுத்தியோ அல்லது Sri Lanka Muslim Media Forum, Bank of Ceylon (BOC), Lake House Branch -  A/C No: 3268511 வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டோ அதற்கான பற்றுச் சீட்டை தபால் மூலம் அனுப்பி வைக்கும் அதேசமயம் muslimmediaforum@gmail.com எனும் அல்லது shihansmedia@gmail.com  எனும் மின்னஞ்சல் ஊடாகவும் அனுப்பி வைக்குமாறும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.