எந்த குறைகளை கண்டாலும் அவற்றுக்கெதிராக குரல்கொடுப்பது ஊடகவியலாளர்களின் மகத்தான பணியாகும் என ரியாத் டெய்லியின் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.சி. ரசூல்தீன் தெரிவித்தார். குறுகிய கால விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள அவருடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் நேற்று (25.06.2018) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடினர். மீடியா போரத்தின் தலைவர் என்.எம் அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்ட அவர்; ஒரு முறை கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் காலத்தில், சர்ச்சையான ஒரு சினிமா படம் தொடர்பாக இளைஞர்கள் சிலர் தன்னிடம் தெரிவித்ததை அடுத்து அதனை கலாநிதி பதியுதீன் மஹ்மூத் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்ததை தொடர்ந்து குறித்த சினிமா படத்தை தடை செய்யக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். இதேவேளை, தற்போதைய நவீன உலகில் சமூக ஊடகங்கள் பெரும் செல்வாக்கு செலுத்துவதாக தெரிவித்த அவர், ஒரு முறை சீனாவில் நிகழ்வொன்றுக்காக அழைக்கப்பட்டிருந்த ஐந்து ஊடகவியல