A+ A-

VIDEO: ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஜஸ்ட் மீடியா பவூண்டேஷன் இணைந்து நடத்திய தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வ ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்

ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியன இணைந்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வ இப்தார் ஒன்று கூடல் நிகழ்வொன்றை, தெமட்டகொடை வீதி, 77 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள "தாருல் ஈமான்" கேட்போர் கூடத்தில், நேற்று   (30) புதன்கிழமை நடத்தியது.
 
"சமூக நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளர்களின் பங்கு" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த இப்தார் ஒன்று கூடல் நிகழ்வில், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் பிரதம ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனின் ஊடகப் பிரதிநிதிகள், முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.
 
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் இராப்போஷண விஷேட ஒன்று கூடல் நிகழ்வில், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ. சுந்திரசேகரம், "எங்கள் தேசம்" மற்றும் "பிரபோதய"  சஞ்சிகைகளின் பிரதம ஆசிரியர் எம். எச். எம். ஹஸன்,  பாதுகாப்பு அமைச்சு ஊடக மையத்தின் பணிப்பாளரும் இராணுவப் பேச்சாளருமான பிரிகேடியர் சுமித் அதபத்து,  ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஸாதிக் ஷிஹான் ஆகியோர் உரை நிகழ்த்தினர்.