Skip to main content

இராஜதந்திர ஊடகவியல் தொடர்பான சர்வதேச பயிற்சிநெறி துருக்கியில் ஆரம்பம்


இலங்கை உற்பட 15 நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்பு


துருக்கி அனடோலு ஏஜன்சி ஊடக நிறுவனத்தின் இராஜதந்திர ஊடகவியல் பயிற்சி நெறி கடந்த திங்கட்கிழமை துருக்கி தலைநகரான அங்காராவில் அமைந்துள்ள அனடோலு ஊடக நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆரம்பமானது.  

தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆபிரிக்க பிராத்தியங்களிலுள்ள 15 நாடுகளைச்சேந்த ஊடகவியலாளர்கள் இந்த பயிற்சிநெறியில் பங்கேற்றுள்ளனர். 

துருக்கி பிரதமரின் கீழ் இயங்கும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் Turkish Cooperation and Coordination Agency (TIKA) இணைந்து அனடோலு ஏஜன்சி இந்த பயிற்சி நெறியை நடாத்துகின்றது. 

இந்த பயிற்சி நெறியானது சர்வதேச ஊடகவியலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளல், பிராந்தியத்தின் நாடுகளுக்கும், துருக்கியின் பிராந்தியக் கொள்கை அணுகுமுறைக்கும் இடையில் இராஜதந்திர உறவு தொடர்பான அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதோடு, ஏனைய நாடுகளின் இராஜதந்திர ஊடகவியலை தமது நாட்டுடன் ஒப்பிட்டு ஆராயக்கூடிய சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது. 

இராஜதந்திர ஊடகவியல், சக்தி இராஜதந்திரம் (Energy Diplomacy), சூழலியல் அரசியல், நாடுகளுக்கிடையிலான கலாச்சார, அரசியல் கட்டமைப்பு, பிராந்திய நாடுகளுக்கிடையிலான முரண்பாடுகளும், தீர்வுகள் போன்ற தலைப்புகளில் சர்வதேச விவகாரங்களில் அனுபவம் வாய்ந்த விரிவுரையாளர்களால் இந்த பயிற்சி நெறியின் போது விரிவுரைகள் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

இரு வாரங்கள் நடைபெறும் இந்த பயிற்சி நெறியின் ஓர் அங்கமாக துருக்கியின் வெளிவிவகார அமைச்சு, கலாசார அமைச்சு அரச மற்றும் ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம்வாய்ந்த பிரதேசங்களுக்கும் பங்கேற்பாளர்கள் விஜயம் செய்யவுள்ளனர்.

துருக்கி அரசாங்கத்திடம் முஸ்லிம் மீடியா போரம் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, துருக்கி ஊடக செயலமர்வில் கலந்துகொள்வதற்கு 10 இளம் முஸ்லிம் ஊடகவியலாளர்‌களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் செயலாளர் ஸாதிக் ஷிஹான், உதவி பொருளாளர் நுஸ்கி முக்தார் ஆகியோர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Popular posts from this blog

CONTACT US

Sri Lanka Muslim Media Forum #41/2, Vijitha Road, Nedimala, Dehiwala, Sri Lanka Email: muslimmediaforum@gmail.com President Mrs. Furkan Bee Ifthikar ✆ +94 779255098 E-mail:fbifthi@gmail.com General Secretary Mr.   M. J Bishrin Mohamed ✆ +94 775070171 E-mail:njbm54@gmail.com Treasurer Shihar Anees ✆ +94 773763577 E-mail:shiharanees@gmail.com Immediate Past President  NM. Ameen  ✆ +94 772612288 E-mail:nmameen08@gmail.com

ABOUT US

Sri Lanka Muslim Media Forum (SLMMF) commenced its journey with only 34 members. on the 09th of June 1995, with a view to bringing together Muslims who are involved in the Print and Electronic Media and also those who are involved in  the mass communication industry in educating, imparting knowledge & skills training of Media Personnel in the country. Sri Lanka Muslim Media Forum has crossed many milestones and has become one of the strongest organizations in this country. It has increased its membership to many folds. Mission  The mission of the SLMMF is to bring together Muslims who are involved in the Print, Electronic and New Media and also those who are involved in the communication industry in educating, imparting knowledge & skills and training of Media Personnel in the country to work towards a set of defined objectives.

Executive Committee and Office Bearers - 2022/2023

Sri Lanka Muslim Media Forum Executive Committee and Office Bearers - 2022/2023   President Mrs. Furkan Bee Ifthikar General Secretary Mr.   M. J Bishrin Mohamed  Treasurer Mr.  Shihar Anees  Immediate Past President  Mr. N.M Ameen National Organizer Moulavi S.M.M.  Musthafa Vice Presidents                                                                             Mr. M.A.M. Nilam Mr. Kalaiwathy Kaleel Assistant Secretaries                                                                  Mr. N.A.M. Sadique Shihan   Mr. Javid Munawwer                                              Asst. Treasurer Mr. J.M. Naalir       Magazine  Editors Mrs. Shamila Sheriff Shums Faahim Head of Training Mrs. sameeha safeer Web Editor Mr. D.G.M.S.M Raafi Media Coordinator   M.S.M Shakir Exco Members  Mr. Thaha Mu zammil AshShaik Jamzith Azeez Mr. M.F. Rifas M.M.Jesmin Mr. Nusky Mukthar C.M.M.Zubair