A+ A-

முஸ்லிம் மீடியா போரத்தின் 60வது ஊடக செயலமர்வு கொழும்பு ஹைரிய்யா பெண்கள் பாடசாலையில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில்  நடத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு தொடரில் 60வது செயலமர்வு 11ஆம் திகதி சனிக்கிழமை (11.05.2018) கொழும்பு ஹைரிய்யா பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளது.

“21ஆம் நூற்றாண்டில் ஊடகம்” எனும் தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் LICO Club உம் இணைந்து நடத்தவுள்ள இச்செயலமர்வு சனிக்கிழமை காலை 8 மணிக்கு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.

மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் சிரேஷ்ட அறிவிப்பாளரான புர்கான் பீ. இப்திகார், லேக்ஹவுஸ் நிறுவன தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம், அல்ஹஸனாத் மாத இதழின் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத், Knowledge Box ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ. அஸ்கர்கான், ஊடகவியலாளர் பிரவ்ஸ் முஹம்மத் உள்ளிட்டோர்  வளவாளர்களாக கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வின் இறுதியில் சான்றிதழ் வழங்கும் வைபவமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.