Skip to main content

Posts

Showing posts from May, 2018

தமிழ் சிங்கள ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வ ஒன்றுகூடலும் இப்தார் நிகழ்வும்

ஜஸ்ட் மீடியா பவுண்டேஷன் மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் ஆகியன இணைந்து தமிழ், சிங்கள ஊடகவியலாளர்களுடன் சிநேகபூர்வ இப்தார் ஒன்று கூடல் நிகழ்வொன்றை, தெமட்டகொடை வீதி, 77 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ள "தாருல் ஈமான்" கேட்போர் கூடத்தில், நேற்று   (30) புதன்கிழமை நடத்தியது.   "சமூக நல்லிணக்கத்திற்கு ஊடகவியலாளர்களின் பங்கு" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்த இப்தார் ஒன்று கூடல் நிகழ்வில், அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் பணியாற்றும் பிரதம ஆசிரியர்கள், செய்தி ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஜஸ்ட் மீடியா பவுண்டேஷனின் ஊடகப் பிரதிநிதிகள், முஸ்லிம் மீடியா போரத்தின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் பங்கேற்றனர்.   ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் என். எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இந்த இப்தார் இராப்போஷண விஷேட ஒன்று கூடல் நிகழ்வில், அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சோ. சுந்திரசேகரம், "எங்கள் தேசம்" மற்றும் "பிரபோதய"  சஞ்சிகைகளின் பிரதம

முஸ்லிம் மீடியா போரத்தின் 60வது ஊடக செயலமர்வு கொழும்பு ஹைரிய்யா பெண்கள் பாடசாலையில்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில்  நடத்தப்பட்டு வரும் மாணவர்களுக்கான ஊடக செயலமர்வு தொடரில் 60வது செயலமர்வு 11ஆம் திகதி சனிக்கிழமை (11.05.2018) கொழும்பு ஹைரிய்யா பெண்கள் கல்லூரியில் நடைபெறவுள்ளது. “21ஆம் நூற்றாண்டில் ஊடகம்” எனும் தொனிப்பொருளில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரமும் SERENDIB SCHOOL DEVELOPMENT FOUNDATION இன் LICO Club உம் இணைந்து நடத்தவுள்ள இச்செயலமர்வு சனிக்கிழமை காலை 8 மணிக்கு முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் ஆரம்பமாகவுள்ளது. மீடியா போரத்தின் தலைவர் என்.எம். அமீன், தர்ஹா நகர் கல்வியியல் கல்லூரியின் முன்னாள் உப பீடாதிபதி கலைவாதி கலீல், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் சிரேஷ்ட அறிவிப்பாளரான புர்கான் பீ. இப்திகார், லேக்ஹவுஸ் நிறுவன தமிழ் வெளியீடுகளுக்கான ஆலோசகர் எம்.ஏ.எம். நிலாம், அல்ஹஸனாத் மாத இதழின் பிரதம ஆசிரியர் அஷ்ஷெய்க் ஜெம்ஸித் அஸீஸ், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் ஹில்மி முஹம்மத், Knowledge Box ஊடக நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.ஏ. அஸ்கர்கான், ஊடகவியலாளர் பிரவ்

இராஜதந்திர ஊடகவியல் தொடர்பான சர்வதேச பயிற்சிநெறி துருக்கியில் ஆரம்பம்

இலங்கை உற்பட 15 நாடுகளை சேர்ந்த ஊடகவியலாளர்கள் பங்கேற்பு துருக்கி அனடோலு ஏஜன்சி ஊடக நிறுவனத்தின் இராஜதந்திர ஊடகவியல் பயிற்சி நெறி கடந்த திங்கட்கிழமை துருக்கி தலைநகரான அங்காராவில் அமைந்துள்ள அனடோலு ஊடக நிறுவனத்தின் தலைமையகத்தில் ஆரம்பமானது.   தென்கிழக்கு ஐரோப்பிய நாடுகள், தென்கிழக்காசிய நாடுகள் மற்றும் தென்கிழக்கு ஆபிரிக்க பிராத்தியங்களிலுள்ள 15 நாடுகளைச்சேந்த ஊடகவியலாளர்கள் இந்த பயிற்சிநெறியில் பங்கேற்றுள்ளனர்.  துருக்கி பிரதமரின் கீழ் இயங்கும் துருக்கியின் ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு நிறுவனத்துடன் Turkish Cooperation and Coordination Agency (TIKA) இணைந்து அனடோலு ஏஜன்சி இந்த பயிற்சி நெறியை நடாத்துகின்றது.  இந்த பயிற்சி நெறியானது சர்வதேச ஊடகவியலாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளல், பிராந்தியத்தின் நாடுகளுக்கும், துருக்கியின் பிராந்தியக் கொள்கை அணுகுமுறைக்கும் இடையில் இராஜதந்திர உறவு தொடர்பான அறிவை பங்கேற்பாளர்களுக்கு வழங்குவதோடு, ஏனைய நாடுகளின் இராஜதந்திர ஊடகவியலை தமது நாட்டுடன் ஒப்பிட்டு ஆராயக்கூடிய சந்தர்ப்பத்தையும் வழங்குகின்றது.  இராஜதந்திர ஊடகவியல், சக்தி இராஜ